|
| அண்ணா நூற்றாண்டு விழா :ஆண்டிப்பட்டி செல்கிறார் ஜெ. |
| சென்னை(ஏஜென்சி), சனிக்கிழமை, 6 செப்டம்பர் 2008 ( 18:18 IST ) | |
அண்ணா நூற்றாண்டையொட்டி அதிமுக சிறப்பு திட்டங்களை துவக்கி வைப்பதற்காக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, வருகிற 15ம் தேதி தனது சொந்தத் தொகுதியான ஆண்டிப்பட்டிக்குச் செல்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
கடந்த 13.02.2008 அன்று நடந்த அதிமுக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி அதிமுக சார்பில் அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவை தமிழ் நாட்டிலும், பிற மாநிலங்களிலும் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து 15 ம் தேதி முதல் நூறாவது ஆண்டு முழுவதும் பொதுக் கூட்டங்கள், கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், மாணவ, மாணவியருக்கான கவிதைப் போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டுமென்றும், அதிமுக கொடியை ஏற்றி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தேன்.
அதனடிப்படையில் 15 முதல் 17 வரை தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் பொதுக் கூட்டங்கள் நடை பெற உள்ளன. அதே போல் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் புதிதாக உருவாக்கப் பட்டுள்ள இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறையில் உறுப்பினர்களாக இருந்துள்ள இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் கம்ப்யூட்டர் பயிற்சி, தையல் பயிற்சி, யோகா பயிற்சி, வாகன ஓட்டுனர் பயிற்சி போன்ற பல்வேறு சிறப்பு திட்டங்கள் முதல்கட்டமாக அண்ணா பிறந்த நாளான 15ந் தேதி துவங்கப்படுகிறது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் இந்த சிறப்பு திட்டங்களை நான் துவக்கி வைக்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு... |
| |
|
|
|
|
 | | | ஜெயம் கொண்டான் | | வம்பை கண்டால் வளைந்து போகும் வினய், சாமான்யர்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி இறுதியில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - வயதான தம்பதியருக்கு (பெற்றோர்களுக்கு) பிறக்கும் குழந்தைகளுக்கு, பைபோபர் குறைபாடு என்றழைக்கப்படும் மனநல பாதிப்பு... |
| |
|
|
|
|
|
|
|