யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
தமிழக காவல்துறை 150 : கருணாநிதி வாழ்த்து
சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 6 செப்டம்பர் 2008   ( 16:13 IST )
தமிழகக் காவல்துறை 150-வது ஆ‌ண்டி‌ல் அடியெடு‌த்து வை‌த்துள்ளதற்கு, முதல்வர் கருணா‌நி‌தி வா‌ழ்‌த்து தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள வாழ்த்து செய்தி:

தமிழகக் காவல்துறை தனது 150-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை அறிந்து பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

சிறப்பு மிக்க வரலாற்றிற்கும், பாரம்பரியத்திற்கும் சொந்தமான தமிழகக் காவல் துறை, தனது சீரிய மக்கள் பணியிலும், திறமையிலும் உலக காவல்துறை வரிசையில் உயரிய இடத்தைப் பெற்று வந்துள்ளது என்றால், அது மிகையாகாது.

சட்டத்தை மதிப்போர்க்கு இன்முகம் காட்டியும், சட்டத்தை மீறுவோரை இரும்புக்கரம் கொண்டு அடக்கியும் தனக்கெனத் தனி முத்திரை பதித்துள்ளது தமிழகக் காவல்துறை.

அமைதியையும், சட்டம்- ஒழுங்கையும் பராமரிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு, தமிழகம் தொழில் புரட்சியில் முதலிடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது.

இவ்வேளையில் அரசுக்கு உறுதுணையாக, பொதுமக்களின் நண்பனாக பாதுகாவலனாக, தியாக மனப்பான்மையுடன் செயல்பட்டு, பேரறிஞர் அண்ணா அறிவித்த கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் மேலும் பல வெற்றிகளைக் குவிக்க என்னுடைய உளமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் எ‌ன்று முதல்வர் கருணா‌நி‌தி கூ‌‌றியு‌ள்ளா‌ர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
விலைவாசியை கட்டுப்படுத்துவதால் வளர்ச்சி பாதிக்காது: பிரதமர்
சேலம் உருக்காலையால் கூடுதல் வேலைவாய்ப்பு : மன்மோகன்
'ஆசிரியர் பணியே தெய்வீகத் தொழில்'
'இ‌ஸ்லா‌‌மிய ‌தீ‌விரவா‌த‌ம்?: ஜெ. ம‌ன்‌னி‌ப்பு கோரா‌வி‌‌டில் போரா‌ட்ட‌ம்'
செ‌ப். 13‌ல் ரேஷன் கார்டு குறை‌தீ‌ர்க்கும் கூ‌ட்ட‌ம்!
மன்மோகன்சிங், சோனியா, கருணாநிதிக்கு டாக்டர் பட்டம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஜெயம் கொண்டான்
வம்பை கண்டால் வளைந்து போகும் வினய், சாமான்யர்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி இறுதியில்...
தாம் தூம்
நாயகன்
ஆரோக்கியம்
நலம் காக்க - வயதான தம்பதியருக்கு (பெற்றோர்களுக்கு) பிறக்கும் குழந்தைகளுக்கு, பைபோபர் குறைபாடு என்றழைக்கப்படும் மனநல பாதிப்பு...
மேலும் படிக்க|மேலும்...