|
| விலைவாசியை கட்டுப்படுத்துவதால் வளர்ச்சி பாதிக்காது: பிரதமர் |
| சேலம் (ஏஜென்சி), சனிக்கிழமை, 6 செப்டம்பர் 2008 ( 12:00 IST ) | |
விலைவாசியை கட்டுப்படுத்தும் மத்திய அரசின் நடவடிக்கையால், நாட்டின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படாது என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
சேலம் உருக்காலையை ரூ.1,900 கோடி மதிப்பீட்டில் விரிவுபடுத்தும் திட்டத்திற்கு, பிரதமர் மன்மோகன் சிங் நேற்று மாலை அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசியதாவது:
நாட்டின் முக்கிய தொழில் மையமாக தமிழகம் உருவெடுத்துள்ளது. இங்குள்ள பல வாகன தொழிற்சாலைகள் காரணமாக, தமிழகத்தை `இந்தியாவின் டெட்ராய்டு' என்று அழைக்கிறார்கள்.
நாட்டின் தொழில் மற்றும் அறிவாற்றல் மையமாக தமிழகம் திகழ்கிறது. தனித்தன்மை வாய்ந்த தமிழ்நாடு, நெற்களஞ்சியமாகவும் விளங்குகிறது. அறிவுசார் பொருளாதாரத்தின் முக்கிய மையம், தமிழகம்.
11-வது ஐந்தாண்டு திட்டத்தில் இந்திய பொருளாதாரம் ஆண்டுக்கு 9 சதவிகிதம் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வளர்ச்சியினால் பணவீக்கம் ஏற்படாமல் இருக்க, உற்பத்தி திறனையும், உற்பத்தி அளவையும் அதிகரிக்க வேண்டும்.
கடந்த சில மாதங்களாக, சர்வதேச சந்தையில் பெட்ரோலிய பொருட்கள் மற்றும் இதர முக்கிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்ததால், பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது நமது முக்கிய பணியாகிவிட்டது.
அதற்கான நடவடிக்கைகள் எடுக்கும்போது, அவை வளர்ச்சி வேகத்தை பாதிக்காமல் இருப்பதற்கான முயற்சிகளையும் உறுதி செய்துள்ளோம். அதற்கென, அனைத்து துறைகளிலும் உற்பத்தியை நாம் அதிகரிக்க வேண்டும்.
இந்தியாவை நவீனமயமாக்க தேவையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் நாம் நீண்ட தொலைவு செல்ல வேண்டியது உள்ளது. எனவே, பெருகிவரும் உருக்கு தேவையை பூர்த்தி செய்ய நாம் கடுமையாக உழைக்க வேண்டும், என்றார் பிரதமர்.
இவ்விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசுகையில், பொதுத்துறை நிறுவனங்கள் லாபகரமாக இயங்கினால்தான் சமுதாய பணிகளையும் தொடர்ந்து செய்ய முடியும். அதற்காக `செயில்'( SAIL) நிறுவனத்தை பாராட்டுகிறேன்' என்றார்.
இந்த விழாவில் மத்திய அமைச்சகள் டி.ஆர்.பாலு, அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன், மணிசங்கர் அய்யர், சுப்புலெட்சுமி ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|