யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
சேலம் உருக்காலையால் கூடுதல் வேலைவாய்ப்பு : மன்மோகன்
சேலம் (ஏஜென்சி), சனிக்கிழமை, 6 செப்டம்பர் 2008   ( 12:00 IST )
சேலம் உருக்காலையின் புதிய திட்டத்தால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

சேலம் உருக்காலையை ரூ.1,900 கோடி மதிப்பீட்டில் விரிவுபடுத்தப்படும் திட்டத்திற்கு, பிரதமர் மன்மோகன் சிங் நேற்று மாலை அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசியதாவது :

கடந்த 1970-ம் ஆண்டு செப்டம்பரில் தமிழக முதல்வர் கருணாநிதி முன்னிலையில் இந்த ஆலைக்கு பிரதமர் இந்திராகாந்தி அடிக்கல் நாட்டினார். இன்றைய விழாவில், சோனியாகாந்தி பங்கேற்று இருப்பது நமது அதிர்ஷ்டமே.

நமது உருக்கு தொழிலை நவீனப்படுத்தி, விரிவுபடுத்தும் ஒரு புதிய திட்டத்தை தொடங்க இருக்கிறோம். வீட்டு உபயோக பொருள் மற்றும் தொழிற்சாலைகளுக்குத் தேவையான அதிகத் தரம் வாய்ந்த உருக்கு உற்பத்தியை மேற்கொள்ள இத்திட்டம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த திட்டம், சேலம் உருக்காலையை ஒருங்கிணைந்த ஒரு உருக்காலையாக மாற்றியமைக்கும். கூடுதல் வேலைவாய்ப்பு வசதிகளை உருவாக்கும்.

உலக உருக்கு வரைபடத்தில் நமது உருக்கு தொழிற்சாலைகளின் முக்கியத்துவம் அதிகரித்து வருவது, நமது நாடு முக்கிய பொருளாதார சக்தியாக உருவெடுத்து வருவதை காட்டுகிறது. உருக்கு உற்பத்தியில் 5-வது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது. 2015-ல் நாம் 2-வது இடத்தை பிடிப்போம்.

இந்த ஆண்டு, இந்திய உருக்கு ஆணையத்தின் பொன்விழா வருடமாகும். இந்த ஆணையம், சேலம் உருக்காலைக்காக காற்றாலை ஒன்றையும் அமைக்க உள்ளது. இதுபோன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த, புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உற்பத்தி செய்யும் நடவடிக்கைகள், மாசை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி உற்பத்தி செலவையும் குறைக்கின்றன.

இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் உருக்கு விலை அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. உலக அளவிலான தேவைக்கும், வினியோகத்திற்கும் இடையிலான ஏற்றத்தாழ்வை இது பிரதிபலிக்கிறது.

கல்கரி உள்ளிட்ட கச்சாப்பொருட்களின் விலையேற்றமும் ஒரு காரணமாகும். இருப்பினும் இந்திய உருக்கு உற்பத்தியாளர்கள் விலையை கட்டுக்குள் வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று பிரதமர் கூறினார்.

இவ்விழாவில், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, மத்திய உருக்குத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
'ஆசிரியர் பணியே தெய்வீகத் தொழில்'
'இ‌ஸ்லா‌‌மிய ‌தீ‌விரவா‌த‌ம்?: ஜெ. ம‌ன்‌னி‌ப்பு கோரா‌வி‌‌டில் போரா‌ட்ட‌ம்'
செ‌ப். 13‌ல் ரேஷன் கார்டு குறை‌தீ‌ர்க்கும் கூ‌ட்ட‌ம்!
மன்மோகன்சிங், சோனியா, கருணாநிதிக்கு டாக்டர் பட்டம்
கிறிஸ்தவர் இடஒதுக்கீட்டிற்கான ஐயப்பாடு நீங்கும் : கருணாநிதி
பருவ மழை பெய்தால்தான் மின்தட்டுப்பாடு நீங்கும் : ‌வீராசா‌‌மி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சத்யம்
அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'! முதலமைச்சர் கனவில்...
குசேலன்
சுப்பிரமணியபுரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய...
மேலும் படிக்க|மேலும்...