யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
'இ‌ஸ்லா‌‌மிய ‌தீ‌விரவா‌த‌ம்?: ஜெ. ம‌ன்‌னி‌ப்பு கோரா‌வி‌‌டில் போரா‌ட்ட‌ம்'
சென்னை (ஏஜென்சி), 6 செப்டம்பர் 2008   ( 10:19 IST )
இஸ்லாமிய தீவிரவாதம் என்று கருத்து கூறியிரு‌ந்த ஜெயலலிதா, ம‌ன்‌னி‌ப்பு தெ‌ரி‌வி‌க்கா‌வி‌ட்டா‌ல் போரா‌ட்ட‌ம் நட‌த்துவோ‌ம் எ‌ன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அ‌‌ந்த அமை‌ப்‌பி‌ன் பொதுச்செயலர் அப்துல்ஹமீது, துணைத்தலைவர் பக்கீர் முகமது அல்தாபி ஆகியோர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌‌ம் பே‌சுகையில் கூறியதாவது:

இஸ்லாமிய மக்களை வேதனை அடையச் செய்யும் வகையில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

கடந்த காலத்தில் காஷ்மீரில் இஸ்லாமிய மத தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பண்டிட்களுக்கும் நிவாரண உதவி வேண்டும் என்று அதில் அவர் கூறியிருக்கிறார்.

காஷ்மீரில் நடப்பது ஏன் இஸ்லாமிய தீவிரவாதம் என்று சாயம்பூச வேண்டும். இஸ்லாத்துக்கும், அதற்கும் சம்பந்தமில்லை. அங்குள்ள தீவிரவாத குழுக்களுக்கு, இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், பவுத்தர்கள் என்ற வேறுபாடு இல்லை. இஸ்லாமியர்கள்தான் அங்கு அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

எனவே, ஜெயலலிதா இஸ்லாமிய தீவிரவாதம் என்று கூறியிருப்பதை இஸ்லாமிய மக்கள் சார்பிலும், தவ்ஹீத் ஜமாஅத் சார்பிலும் வன்மையாக கண்டிக்கிறோம். அவர் கூறிய கருத்துக்கு மன்னிப்பு தெரிவித்து, திரும்ப பெறாவிட்டால் நாங்கள் போராட்டம் நடத்துவோம் எ‌ன்று அவ‌ர்க‌ள் தெரிவித்தனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
செப்.15 முத‌ல் த‌மிழக‌ம் முழுவது‌ம் அரசு கே‌பி‌ள் டி.‌வி. சேவை
தமிழக காவல்துறை 150 : கருணாநிதி வாழ்த்து
விலைவாசியை கட்டுப்படுத்துவதால் வளர்ச்சி பாதிக்காது: பிரதமர்
சேலம் உருக்காலையால் கூடுதல் வேலைவாய்ப்பு : மன்மோகன்
'ஆசிரியர் பணியே தெய்வீகத் தொழில்'
செ‌ப். 13‌ல் ரேஷன் கார்டு குறை‌தீ‌ர்க்கும் கூ‌ட்ட‌ம்!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஜெயம் கொண்டான்
வம்பை கண்டால் வளைந்து போகும் வினய், சாமான்யர்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி இறுதியில்...
தாம் தூம்
நாயகன்
ஆரோக்கியம்
நலம் காக்க - வயதான தம்பதியருக்கு (பெற்றோர்களுக்கு) பிறக்கும் குழந்தைகளுக்கு, பைபோபர் குறைபாடு என்றழைக்கப்படும் மனநல பாதிப்பு...
மேலும் படிக்க|மேலும்...