|
| செப். 13ல் ரேஷன் கார்டு குறைதீர்க்கும் கூட்டம்! |
| சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 5 செப்டம்பர் 2008 ( 19:22 IST ) | |
குடும்ப அட்டைகள் தொடர்பான மக்கள் குறைதீர் கூட்டம் வரும் 13ம் தேதி நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
புதிய குடும்ப அட்டைகள் பெறுதல், மாற்றங்கள் செய்தல் மற்றும் பொது விநியோகத் திட்டத்தில காணப்படும் குறைபாடுகள் குறித்து தமிழகம் முழுவதும் வட்டங்கள் தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்படும் என்று அரசு அறிவித்தது.
அதன்படி, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின், சென்னை 14 மண்டல பகுதி மக்களின் குறைகளை கேட்டு தீர்வுகாணும் பொருட்டு, வரும் 13ம் தேதி காலை 10 மணிக்கு மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்படவுள்ளது.
இதில், பொது விநியோக திட்டத்தைச் செயல்படுத்தும் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, கூட்டுறவுத் துறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதில், அப்பகுதி பொதுமக்கள் கலந்துகொண்டு, புதிய குடும்ப அட்டைகள் வழங்குதல் மற்றும் பொது விநியோக திட்ட கடைகளின் செயல்பாடுகள், தனியார் துறையில் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகள், வாங்கும் நுகர்வோர்கள் ஏமாற்றப்படுவது அல்லது குறைகள் இருப்பது உள்ளிட்ட தங்களது குறைகள் குறித்து தெரிவிக்கலாம்.
பொதுமக்களின் குறைகளை விரைந்து தீர்க்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சென்னையில் உள்ள 14 மண்டல பகுதி வாழ் பொது மக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|