|
| மன்மோகன்சிங், சோனியா, கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் |
| சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 5 செப்டம்பர் 2008 ( 19:01 IST ) | |
சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற விழாவில் பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதலமைச்சர் கருணாநிதி மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
சென்னை பல்கலைக்கழகத்தின் 150-வது ஆண்டு நிறைவு விழா மற்றும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் விழா சென்னை நூற்றாண்டு விழா கலையரங்கில் இன்று காலை நடந்தது.
காலை 10 மணிக்கு பிரதமர் மன்மோகன் சிங், முதலமைச்சர் கருணாநிதி, சோனியாகாந்தி விழா அரங்குக்கு வந்தனர்.அப்போது அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விழாவிற்கு வந்தவர்களை சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ராமச்சந்திரன் வரவேற்றுப் பேசினார்.
இதனையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மன்மோகன்சிங், கருணாநிதி மற்றும் சோனியாகாந்தி ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை சென்னை பல்கலைக்கழகவேந்தரும்,ஆளுநருமான பர்னாலா வழங்கினார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆற்றிய பணிக்காக பிரதமருக்கும்,ஜனநாயக மரபு மற்றும் மதநல்லிணக்கத்துக்கு ஆற்றிய சேவைக்காக சோனியா காந்திக்கும்,தமிழ்மொழி, தமிழ்ப் பண்பாடு, தமிழ் இலக்கிய மேம்பாட்டுக்கும் சமூக நீதிக்கு பாடுபட்டதற்காக முதல்வர் கருணாநிதிக்கும் இந்த பட்டங்கள் வழங்கப்படுவதாக சென்னைப் பல்கலைக் கழகம் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|