யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
சுயமரியாதை இருந்தால் மன்மோகன் பதவி விலக வேண்டும் : ஜெ
சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 5 செப்டம்பர் 2008   ( 17:19 IST )
அணுச‌‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் குறித்து நாடாளும‌ன்ற‌த்த‌ி‌‌ல் பொ‌ய் சொ‌ல்‌லிய பிரதமர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங், தமக்கு சுயமரியாதை இன்னமும் இருப்பதாக நினைத்தால் உடனடியாக பத‌வி ‌விலக வே‌ண்டு‌ம் எ‌ன்று அதிமுக பொது‌ச் செயல‌ர் ஜெயல‌லிதா வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல் கூறியிருப்பதாவது :

அய‌ல்நாட்டு சக்திகளின் கட்டளைப்படி செயல்படவும், அய‌ல்நாட்டு அமைப்புகளின் மேற்பார்வையில் இயங்கவும், இந்தியாவின் நடவடிக்கைகளை உட்படுத்தும் வகையில் ஓர் (அணுசக்தி) ஒப்பந்தத்தை மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிறைவேற்றத் துடிக்கிறது.

இதன்மூலம் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மத்திய அரசு நம் நாட்டின் இறையாண்மையை அந்நிய சக்திகளிடம் அடகு வைத்திருக்கிறது. இத்தகைய ஓர் அரசை நாம் இனியும் நம்ப முடியாது. இந்த அரசு நாடாளுமன்றத்திலேயே பொய் சொல்லியிருக்கிறது.

இந்த அரசு, இந்த தேசத்தையே ஏமாற்றியிருக்கிறது.இந்த அரசு இந்தியாவின் இறையாண்மையை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. இந்த அரசு நம் மக்களை கைவிட்டிருக்கிறது.இந்த அரசு மக்களின் துயரங்களைப் பற்றி கவலைப்படுவதாக இல்லை.

இந்த அரசு மக்களின் துயரங்களைப்பற்றி கவலைப்படுவதாக இல்லை. கட்டுப்படுத்த முடியாத பணவீக்கம், வரலாறு காணாத விலைஉயர்வு, பகிரங்கமாகத் தெரியும் லஞ்ச ஊழல், பற்றாக்குறையாய் இருக்கும் எரிசக்தி மின்சாரம், மதக் கலவரம், சமூகங்களிடையே பிணக்கு, பல் வேறு இடங்களில் பசி, பஞ்சம், பட்டினி.

இந்தப் பிரச்சனைகளெல்லாம் மத்திய அரசுக்கு பொருட்டாக தெரியவில்லை. இந்த அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. இத்தகைய அரசு பதவி விலக வேண்டும். உலகத்தின் ஒட்டுமொத்த ஜனத்தொகையில் ஐந்தில் ஒரு பங்காக உள்ள 110 கோடி இந்திய மக்களின் எதிர்காலம் குறித்து முடிவெடுக்கக்கூடிய நிலையில், இந்த அரசு இனியும் தொடரக்கூடாது.

டாக்டர் மன்மோகன் சிங், கற்றறிந்த பொருளாதார வல்லுநர், நேர்மையான மனிதர் என்று நான் இதுவரை மதிப்பிட்டிருந்தேன். இன்றைக்கு சர்வதேச அரங்கில் தன்னுடைய அனைத்து மரியாதையும், நம்பகத்தன்மையையும் இழந்தவராக மன்மோகன் சிங் நிற்கிறார்.

அவர் சேர்ந்திருக்கும் அரசியல் கூட்டு காரணமாகத்தான் இந்த மரியாதை இழப்பு அவருக்கு ஏற்பட்டிருப்பதாக நான் நினைக்கிறேன். தனக்கு ஏதேனும் சுயமரியாதை இன்னமும் இருப்பதாக அவர் நினைத்தால் டாக்டர் மன்மோகன் சிங் உடனடியாக பதவி விலகவேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் ஜெயல‌லிதா கூறியு‌ள்ளா‌ர்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்கள் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
கல்வி : அரசியல்வாதிகளுக்கு பிரதமர் வலியுறுத்தல்
ஒரிசாவை போல் காஷ்மீர் இந்துவுக்கும் உதவி: ஜெ. கோரிக்கை
அண்ணா நூற்றாண்டு விழா: அதிமுக 3 நாள் பொதுக்கூட்டம்
ஸ்பென்சர் பிளாசாவில் தீ: துணிக்கடை சாம்பல்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சத்யம்
அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'! முதலமைச்சர் கனவில்...
குசேலன்
சுப்பிரமணியபுரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய...
மேலும் படிக்க|மேலும்...