யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு
நாகப்பட்டினம் (ஏஜென்சி), 5 செப்டம்பர் 2008   ( 17:02 IST )
இ‌ந்‌திய கட‌ல் எ‌ல்லை‌க்கு‌ள் அ‌த்து‌‌மீ‌றி நுழை‌ந்து மிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்தார்.

கடந்த 3 ம் தேதி நாகை மீனவர்கள் 6 பேர் படகு ஒன்றில் கடலில் மீன் பிடிக்கச் சென்றிருந்தனர். இவர்கள் மீன் பிடித்துவிட்டு நேற்று இரவு கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், இந்திய கடல் எல்லைக்குட்பட்ட கோடியக்கரைக்கு அருகே வந்துக் கொண்டிருந்தபோது அப்பகுதியில் அத்துமீறி நுழைந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதில் குழந்தைவேலு (வயது 37) என்பவர் காலில் குண்டு பாய்ந்து காயமுற்றார்.

துப்பாக்கிச் சூட்டில் இருந்து உயிர் தப்பி இன்று அதிகாலை கரைக்குத் திரும்பிய மீனவர்கள், காலில் குண்டு பாய்ந்த குழந்தைவேலுவை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இது குறித்து மீன்வளத்துறை அதிகாரியிடமும், காவல் துறையிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்கள் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
கல்வி : அரசியல்வாதிகளுக்கு பிரதமர் வலியுறுத்தல்
ஒரிசாவை போல் காஷ்மீர் இந்துவுக்கும் உதவி: ஜெ. கோரிக்கை
அண்ணா நூற்றாண்டு விழா: அதிமுக 3 நாள் பொதுக்கூட்டம்
ஸ்பென்சர் பிளாசாவில் தீ: துணிக்கடை சாம்பல்
சோனியா, மன்மோகனுக்கு இன்று டாக்டர் பட்டம்!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சத்யம்
அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'! முதலமைச்சர் கனவில்...
குசேலன்
சுப்பிரமணியபுரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய...
மேலும் படிக்க|மேலும்...