|
| சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்கள் முன்ஜாமீன் மனு தள்ளுபடி |
| சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 5 செப்டம்பர் 2008 ( 16:31 IST ) | |
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்கள் ராஜரத்தினம் மற்றும் யோகரத்தினம் ஆகியோர் தாக்கல் செய்திருந்த முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டதால், அவர்கள் எந்த நேரமும் கைதாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை தி.நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் பாத்திரக் கடையில் அண்மையில் ஏற்பட்ட தீவிபத்தில் 2 ஊழியர்கள் உயிரிழந்தனர்.கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த மாம்பலம் போலீசார் கடையின் மேலாளர், கண்காணிப்பாளர் ஆகியோரைக் கைது செய்தனர்.
இதனையடுத்து கடையின் உரிமையாளர்களான யோகரத்தினம்,ராஜரத்தினம் ஆகியோர் முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது.இதையடுத்து விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி இன்று மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது,அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், " தீயணைப்புத் துறையினரின் விசாரணை இன்னும் முடியவில்லை.கட்டடத்தில் விதிமீறல் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.எனவே முன்ஜாமீன் வழங்கக் கூடாது " என கூறினார்.
அந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி ரகுபதி,சரவணா ஸ்டோர்ஸ் கட்டடத்தில் விதி மீறல் நடந்திருப்பது ஆவணங்களைப் பார்க்கும்போது தெரிவதாகவும், எனவே முன்ஜாமீன் வழங்க இயலாது என்றும் கூறி மனுவைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.
இதனால் ராஜரத்தினம் மற்றும் யோகரத்தினம் ஆகிய இருவரும் எப்போது வேண்டுமானாலும் கைதாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|