|
| ஜெ. மீது பொய் வழக்கா ? கருணாநிதி பதில் |
| சென்னை (ஏஜென்சி), 2 செப்டம்பர் 2008 ( 19:17 IST ) | |
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தனக்கு எதிராக போடப்பட்ட ஊழல் வழக்குகள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை என ஜெயலலிதா கூறியிருப்பதற்கு டான்சி வழக்கு தீர்ப்பு ஒன்றே உண்மை என்ன என்பதை உரைக்கும் என தமிழக முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
தன் மீதான அனைத்து ஊழல் வழக்குகளும், திமுக ஆட்சிக் காலத்தில் ஜோடிக்கப்பட்டவை என்றும், வழக்குகளைக் கண்டு தாம் ஒருபோதும் அஞ்சியதில்லை என்றும்,பொய் வழக்குகளிலிருந்து தாம் விடுதலை பெற்றதாகவும் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா குற்றம் சாற்றியிருந்தார்.
இதற்கு பதிலளித்து கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது :
ஜெயலலிதா மீது தாங்கள் பொய் வழக்குகளை புனைந்ததாகவும்,ஆனால் அதிலிருந்து அவர் விடுதலை பெற்றதாகவும் ஜெயலலிதா அறிக்கையில் சொல்லியிருக்கிறார்.
இதற்கு பதில் அளிக்க டான்சி நிலம் ஒன்று போதுமே! உச்ச நீதிமன்றத்தில் இந்த டான்சி நில வழக்கில் அளித்த தீர்ப்பு என்ன ? அப்போது நீதிபதி யாவை ? அரசு நிலத்தை வாங்கியது தவறு.அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று சொன்னது உண்டா ? இல்லையா ? அதையேற்றுக் கொண்டு, மோசடியாக வாங்கிய நிலத்தை ஜெயலலிதா திருப்பிக் கொடுத்தது உண்டா இல்லையா ?
நிலஉச்ச வரம்பு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரும் முடிவை அமைச்சரவை எடுத்துள்ளதற்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ஐயப்பாடுகளை எழுப்பியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, நில உச்சவரம்பு சட்டத்தை நாட்டிலேயே முதன்முறையாக நிறைவேற்றி சாதனை படைத்தது திமுக அரசு தான் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
கடந்த 1970இல் உச்சவரம்பு 15 ஏக்கர் என்று திடீரென்று அறிவித்து சட்டம் இயற்றப்பட்டதும் தி.மு.க ஆட்சியில் தான்.இதையடுத்து நில உச்சவரம்பு சட்டத்திற்கு எதிராக நிலம் வைத்திருந்தவர்களிடம் இருந்து மொத்தம் 1,78,880 ஏக்கர் நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டு, தகுதியுள்ள நிலமற்ற ஒரு லட்சத்து 37,236 ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
நில உச்சவரம்புச் சட்டத்தின் கீழ் வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கு விதிவிலக்கு வழங்க கோரி ராமதாஸ், அரசுக்கு விண்ணப்பித்திருப்பதை மறந்து விட்டு, தற்போது அறிக்கை விட்டிருப்பது யாரை ஏமாற்றுவதற்கு என்று புரியவில்லை.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|