யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
இருள் அகன்று ஒளி வீசட்டும் :ஜெ. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து
சென்னை( ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 2 செப்டம்பர் 2008   ( 18:59 IST )
தமிழ்நாட்டில் இருளகன்று ஒளி வீசவும், விலைவாசி வீழ்ச்சியடையவும் வேண்டுமென்று விநாயகப் பெருமானை பிரார்த்திப்பதாக விநாயகர் சதுர்த்தியையொட்டி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் திமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது :

தும்பை மலர்போல சிரித்து, துதிப்போர்க்கு துன்பம் நீக்கி துணை நிற்கும் முழு முதற் கடவுளாம் விநாயகப் பெருமான் அவதரித்த திருநாளான விநாயக சதுர்த்தியை கொண்டாடும் அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆதிமூலமானவரான வேழமுகத்தோனை வணங்கினால் வெற்றி நிச்சயம் என்பது தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கை. அதற்கேற்ப பெயரிலே பிள்ளை என்று இருப்பதால் அம்மாவின் அன்புக்கு கட்டுப்படும் குழந்தைபோல் அவரை வணங்கும் அனைவரின் அன்புக்கும் கட்டுப்பட்டு, வேண்டியதை அருளும் கருணைக் கடலாக விநாயகப்பெருமான் விளங்குகிறார்.

கருணை வடிவமாக காட்சியளிக்கும் விநாயகப்பெருமான் அவதரித்த இந்த நன்னாளில் தமிழ்நாட்டில் இருளகன்று ஒளி வீச, தட்டுப்பாடுகள் தகர்த்தெறியப்பட, விலைவாசி வீழ்ச்சியடைய, அராஜகம் அழிய, அமைதி தவழ, அனைத்து தரப்பு மக்களும் எல்லா நலமும் வளமும் பெற்று மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் வாழ, நல்லாட்சி மலரவேண்டுமென்று விநாயகப் பெருமானை பிரார்த்திக்கிறன்.

விநாயக சதுர்த்தியை பயபக்தியோடு கொண்டாடும் எனதருமை மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ரமலான் நோன்பு இன்று துவங்கியது!
சரவணா ஸ்டோரில் ‌‌தீயில் 2 பேர் பலி: உடல்கள் மீட்பு
இம்மாதத்தில் வாக்காளர் இறுதிப்பட்டியல்: நரேஷ் குப்தா
பழனியில் இன்று முதல் மீண்டும் ரோப்கார்!
அண்ணா வாரிசுகளுக்கு முதல்வர் ரூ.10 லட்சம் நிதி!
மின்வெட்டு: கோவையில் விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சத்யம்
அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'! முதலமைச்சர் கனவில்...
குசேலன்
சுப்பிரமணியபுரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய...
மேலும் படிக்க|மேலும்...