|
| சரவணா ஸ்டோரில் தீயில் 2 பேர் பலி: உடல்கள் மீட்பு |
| சென்னை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 2 செப்டம்பர் 2008 ( 12:53 IST ) | |
சென்னை சரவணா ஸ்டோர்ஸ் பாத்திரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 ஊழியர்கள் பலியாகினர். கருகிய நிலையில் அவர்களது உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
சென்னை ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர் பாத்திரக்கடையில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ, இன்று அதிகாலை 3 மணி வரை எரிந்தது. தீயணைப்புப் படையினர் விடிய விடிய போராடி தீயை அணைத்தனர்.
இதன் பின்னர் கடை ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்று கணக்கெடுக்கப்பட்டது. இதில் 2 ஊழியர்கள் மட்டும் மாயமானது தெரியவந்தது. கடைசியாக, அவர்கள் இருவரும் 5 வது மாடியில் தீயில் சிக்கி கதறியதாக சக ஊழியர்கள் சிலர் தெரிவித்தனர்.
இதையடுத்து, தீ முழுமையாக அணைக்கப்பட்டதும் 4வது மற்றும் 5வது மாடிகளுக்குச் சென்று ஊழியர்களை தேடினர். பல அடி உயரத்துக்கு குவிந்திருந்த சாம்பலை அகற்றியபோது ராமஜெயம் (22), கோட்டைசாமி (27) ஆகிய 2 ஊழியர்கள் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடப்பது தெரியவந்தது.
அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதில் ராமஜெயம், திருச்செந்தூர் அருகேயுள்ள ஆறுமுகநேரி கிழக்கு சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர். இவர் சேல்ஸ்மேனாக பணிபுரிந்து வந்தார்.
கோட்டைச்சாமி நெல்லை மாவட்டம் கீழ்ப்பாவூரை சேர்ந்தவர். இவரும் கடந்த 6 ஆண்டுகளாக இந்த கடையில் சேல்ஸ்மேனாக பணிபுரிந்து வந்தார்.
இதுகுறித்து ராமஜெயம் மற்றும் கோட்டைச்சாமியின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சென்னை வந்துள்ளனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|