|
| இம்மாதத்தில் வாக்காளர் இறுதிப்பட்டியல்: நரேஷ் குப்தா
|
| சென்னை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 2 செப்டம்பர் 2008 ( 11:09 IST ) | |
தமிழக வாக்காளர் இறுதிப்பட்டியல் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், புதிதாக பெயர் சேர்ப்போர், தொகுதி மாறியோர் திருத்தங்கள் செய்வதற்காக கால அவகாசம் அளிக்கப்பட்டது.
இதில், சுமார் 35 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. கடந்த ஆண்டு நடைபெற்ற திருத்தத்தின்போது, 13 லட்சம் முதல் 15 லட்சம் விண்ணப்பங்கள் மட்டுமே வந்தன.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தங்கள் தொடர்பான விண்ணப்பங்கள், சிறப்பு முகாம்கள், வாக்குச்சாவடி அதிகாரிகள், கல்லூரிகள் மற்றும் இணையதளம் மூலமாக பெறப்பட்டன.
தமிழகத்தில் 2008ம் ஆண்டில் மக்கள்தொகை 6 கோடியே 60 லட்சமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிக்கு பிறகு, இந்த தொகையில் 65 சதவீதத்தினர், அதாவது சுமார் 4 கோடியே 29 லட்சம் பேர் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவர் என்று கருதுகிறோம்.
இறுதி வாக்காளர் பட்டியலை இம்மாதத்தின் 3வது வாரத்தில் வெளியிடும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|