|
| பழனியில் இன்று முதல் மீண்டும் ரோப்கார்! |
| பழனி (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 2 செப்டம்பர் 2008 ( 10:58 IST ) | |
பழனி முருகன் கோவிலில், ரோப் கார் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கப்படுகிறது.
தமிழகத்தில் முதல் முறையாக பழனி முருகன் கோவிலில் சுமார் ரூ.4 கோடியில் ரோப் கார் அமைக்கப்பட்டது. பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட இந்த ரோப் கார் சேவை கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 3ந்தேதி முதல் செயல்பட தொடங்கியது.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்டு 26ம் தேதி ரோப் காரில் திடீர் விபத்து ஏற்பட்டு 4 பக்தர்கள் இறந்தனர். இதனால் ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டது.
இதன் பின்னர், ரோப் கார் பாதுகாப்பு குறித்து ஆலோசனைகள் வழங்க தமிழக அரசு சார்பில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்த குழுவின் பரிந்துரைகளின் பேரில் சுமார் ஒன்றரை கோடி செலவில் பராமரிப்பு பணிகள் நடை பெற்றன. அதன்படி ரோப் கார் இயக்கம் மிகவும் நவீன முறையில் மாற்றி அமைக்கப்பட்டது.
பாதுகாப்புகளுடன் கூடிய நவீன ரோப் கார் சேவை கடந்த சில வாரங்களாக சோதனை ஓட்டம் பார்க்கப்பட்டது. இதை தொடர்ந்து, ரோப்கார் சேவையின் தொடக்க விழா மற்றும் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தானியங்கி பஞ்சாமிர்தம் தயாரிப்பு நிலைய திறப்பு விழா ஆகியவை இன்று நடைபெறுகிறது.
புதிதாக வடிவமைக்கப்பட்ட ரோப் காரை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் இயக்கி வைக்கிறார். தானியங்கி பஞ்சாமிர்தம் தயாரிப்பு நிலையத்தை வருவாய் மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சர் இ.பெரியசாமி திறந்து வைக்கிறார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|