|
| மின்வெட்டு: கோவையில் விஜயகாந்த் ஆர்ப்பாட்டம் |
| சென்னை (ஏஜென்சி), 2 செப்டம்பர் 2008 ( 10:15 IST ) | |
இரவிலும் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளதை கண்டித்து, கோவையில் வரும் 7ம் தேதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை நகரில் தினம் ஒன்றரை மணி நேரம், புறநகரங்களில் 3 மணி நேரம், மற்ற மாவட்டங்களில் 5 மணி நேரம் என அதிகாரப்பூர்வமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகளை பொறுத்தவரை மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை, மின்சாரத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் மட்டும் இருந்த மின்வெட்டு இப்பொழுது இரவிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனால், விவசாயிகள், தொழில் நிறுவனங்கள், லட்சக்கணக்கான தொழிலாளர்கள், மாணவ, மாணவிகள், தாய்மார்கள், தனியார் மற்றும் அரசு அலுவலர்கள், மருத்துவமனைகள் என ஒட்டுமொத்த தமிழகமே பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மின்சாரத்தேவை 9,567 மெகாவாட். இதில் உற்பத்தியாவது 6,048 மெகாவாட் மட்டுமே என்று அறிகிறோம். பற்றாக்குறை 3,500 மெகாவாட்டுக்கு மேல் உள்ளது. இதை எப்படி ஈடுகட்ட போகிறார்கள் என்பது தெரியவில்லை.
இதை தனியார் ஜெனரேட்டர்கள் மூலம் சமாளிக்க முடியாது. ஏனெனில் அதற்கும் டீசல் தேவை. அதிலும் பற்றாக்குறை உள்ளது. இந்த மின்வெட்டை கண்டித்து பொதுமக்களே தெருவில் இறங்கி போராட ஆரம்பித்துவிட்டனர்.
தமிழ்நாட்டிற்கு ஒளிமயமான எதிர்காலத்தை தருவோம் என்று பேசிவிட்டு தமிழக மக்களுக்கு இன்று திமுக அரசு இருண்ட காலத்தை மட்டுமே தந்திருக்கிறது.
இதை கண்டித்து வரும் 7ம் தேதி கோவையில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|