|
| தமிழகத்தை மது இல்லாத மாநிலமாக்குவோம் : ராமதாஸ் |
| சென்னை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 2 செப்டம்பர் 2008 ( 10:06 IST ) | |
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை மது இல்லாத மாநிலமாக்குவோம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் உறுதியளித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் நடந்த பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது:
திமுக கூட்டணியில் நாங்கள் இடம்பெற்றிருந்தபோது, அரசுக்கு பல ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை எழுப்பி வந்தோம். அப்போது, தைலாபுரம் தோட்டத்தில் இருந்து மருந்து கிடைப்பதாக அவர்கள் கூறினர். ஆனால், இப்போது வேறு மாதிரி பேசுகிறார்கள்.
திமுக கொள்கையை பற்றியும், பாமகவின் கொள்கைகளைப் பற்றியும் ஒரே மேடையில் விவாதிக்க நான் தயார். நீங்கள் தயாரா?
எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் பிற்படுத்தப்பட்டவருக்கான இடஒதுக்கீட்டை 31 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக மாற்றினார். இதை 5ஆக பிரிக்க வேண்டும் என்று நாங்கள் குரல் கொடுத்தோம்.
நீங்கள் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 30 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20 சதவீதம் என்று பிரித்தீர்கள். இதற்கு காரணம் எங்கள் போராட்டம்.
உயர்கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இடஒதுக்கீட்டிற்காக நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்தோம். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் நடந்த கூட்டத்தில், 3 வருடத்திற்கு பிறகு இடஒதுக்கீட்டை கொண்டு வரலாம் என்று சொன்னபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன்.
இதன் காரணமாக 27 சதவீத இடஒதுக்கீடு இந்த ஆண்டே நடைமுறைப்படுத்தப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டது.
இந்தியாவிலேயே தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வேண்டும் என்று போராடிய முதல் கட்சி பாமக தான். சமூக நீதிக்காக பாடுபடும் ஒரே கட்சியும் பாமகதான்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மது இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவோம். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|