யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
கேபிள் டி.வி. பிரச்னை: கருணாநிதிக்கு வரதராஜன் கடிதம்
சென்னை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 2 செப்டம்பர் 2008   ( 09:49 IST )
மதுரை கேபிள் டிவி பிரச்சனையில் தலையிட்டு தீர்வு காணும்படி முதல்வர் கருணாநிதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் என்.வரதராஜன் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மதுரையில் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மிரட்டப்படுவதாகவும், போலீசாரால் கைது செய்யப்படுவதாகவும் பல கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் நேரிலும், கடிதங்கள் மூலமும் புகார் தெரிவித்து வருகின்றனர்.

கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் தாங்கள் விரும்பும் நிறுவனத்திடம் சேனலை பெற்று மக்களுக்கு ஒளிபரப்புவது அவர்களது உரிமை. இதில், இன்னொரு நிறுவனம் தலையிட்டு, தன்னுடைய நிறுவனத்தின் சேனல்களைத்தான் ஒளிபரப்ப வேண்டும் என்று வலியுறுத்துவது முறையல்ல.

இந்த பிரச்சினையில் காவல்துறை ஒரு சார்பாக செயல்பட்டு வருவதாகவும் புகார் கூறப்படுகிறது.

இந்த பிரச்சினையில் முதல்வர் கருணாநிதி தலையிட்டு, கேபிள் டி.வி. உரிமையாளர்கள் தாங்கள் விரும்பும் நிறுவனத்திடம் சேனலை பெற்று, தொழில் செய்வதற்கு உரிய வாய்ப்பையும், பாதுகாப்பையும் வழங்க வேண்டும்.

ஏற்கனவே தமிழக அரசு அறிவித்துள்ளது போல், உடனடியாக கேபிள் டி.வி. நிறுவனத்தை அரசே தொடங்கி நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அதிமுக பொது செயலாளர் தேர்தல்: இன்று வேட்புமனு
தமிழகத்தில் 6 புதிய பொறியியல் கல்லூரிகள்
சரவணா ஸ்டோர்ஸில் மீண்டும் தீ: 2 பேர் பலி?
'வறுமையை ஒழிப்போம்' வெற்று கோஷமாகி விட்டது : ராமதா‌ஸ்
அதிமுகவில் சேர்க்குமாறு கருணாநிதி கெஞ்சும் காலம் வரும் :ஜெ
உள்ளாட்சி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சத்யம்
அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'! முதலமைச்சர் கனவில்...
குசேலன்
சுப்பிரமணியபுரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய...
மேலும் படிக்க|மேலும்...