|
| அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல்: இன்று வேட்புமனு |
| சென்னை (ஏஜென்சி), 2 செப்டம்பர் 2008 ( 09:42 IST ) | |
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் வரும் 10ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
அதிமுக அமைப்பு பொது தேர்தலை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்திட வேண்டும் என்ற விதிமுறைகளுக்கு ஏற்ப, கழக பொதுச் செயலாளர் பொறுப்புக்கான தேர்தல் வரும் 10ம் தேதி நடக்கிறது.
தேர்தல் ஆணையராக விசாலாட்சி நெடுஞ்செழியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வேட்பு மனு தாக்கல் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. 7ம் தேதி வரை மனுதாக்கல் செய்யலாம். 8ம் தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுவை வாபஸ் பெற 9ம் தேதி கடைசி நாள். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் ஜெயலலிதா மீண்டும் பொதுச் செயலாளராக தேர்ந்து எடுக்கப்படவுள்ளார். இதன் மூலம் தொடர்ந்து 5வது முறையாக அவர் பொறுப்பேற்கிறார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|