யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
தமிழகத்தில் 6 புதிய பொறியியல் கல்லூரிகள்
சென்னை (ஏஜென்சி), 2 செப்டம்பர் 2008   ( 09:32 IST )
திண்டிவனம், விழுப்புரம் உள்பட 6 இடங்களில் புதிய பொறியியல் கல்லூரிகளை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், உயர் கல்வித்துறை சார்பில் திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, அரியலூர், திருக்குவளை, ராமநாதபுரம் ஆகிய 6 இடங்களில் அரசு பொறியியல் கல்லூரிகளின் தொடக்க விழா நேற்று நடைப்பெற்றது.

முதல்வர் கருணாநிதி புதிய கல்லூரிகளை தொடங்கி வைத்துப் பேசியதாவது:

இன்றைக்கு உயர்கல்வி பெற்றுள்ள மாணவர்கள், ஒரு காலத்திலே உரிய கல்விகூடக் கிடைப்பதற்கு தடுக்கப்பட்டவர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.

அந்த உரிய கல்வி கிடைக்காமல் அவர்கள் வேதனைப்பட்ட நேரத்திலேதான், பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு கல்வி தர வழிவகுத்தார். அவர் வகுத்த வழிநின்று தான் இன்றைக்கு நாங்கள் உரிய கல்வி பெற்றாயா, அடுத்து உயர் கல்வியையும் பெற்றுக்கொள் என்று உயர்கல்வி தருகின்ற நிலையை ஏற்படுத்தியுள்ளோம்.

இந்த நிலை வளர்ந்தால் எதிர்காலத் தமிழகத்தை, பூங்காவனமாக, பூந்தோட்டமாக நிச்சயமாக ஆக்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இவ்விழாவில், சென்னை சைதாப்பேட்டையில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்திற்கு ரூ.12.5 கோடி மதிப்பில் புதிய வளாகத்திற்கு அடிக்கல் நாட்டுதல், காமராஜர் சாலையில் ரூ.80 லட்சம் செலவில் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுதல், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற நூல்கள் வெளியிடுதல், சிறந்த கல்வியாளர்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் அரசு விருதுகள் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைப்பெற்றன.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இம்மாதத்தில் வாக்காளர் இறுதிப்பட்டியல்: நரேஷ் குப்தா
பழனியில் இன்று முதல் மீண்டும் ரோப்கார்!
அண்ணா வாரிசுகளுக்கு முதல்வர் ரூ.10 லட்சம் நிதி!
மின்வெட்டு: கோவையில் விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தை மது இல்லாத மாநிலமாக்குவோம் : ராமதாஸ்
கேபிள் டி.வி. பிரச்னை: கருணாநிதிக்கு வரதராஜன் கடிதம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சத்யம்
அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'! முதலமைச்சர் கனவில்...
குசேலன்
சுப்பிரமணியபுரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய...
மேலும் படிக்க|மேலும்...