|
| சரவணா ஸ்டோர்ஸில் மீண்டும் தீ: 2 பேர் பலி? |
| சென்னை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 2 செப்டம்பர் 2008 ( 08:39 IST ) | |
சென்னை சரவணா ஸ்டோர்ஸ் பாத்திரக்கடையில் நள்ளிரவில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டதால் தீயணைப்புப் படையினர் விடிய விடிய போராடி தீயை கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்தில சிக்கி 2 பேர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
சென்னை, தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் பாத்திரக் கடையில் நேற்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் கோடிக்கணக்கான பொருட்கள் எரிந்து நாசமாகின.
இதுகுறித்து தகவலறிந்ததும் தீயணைப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுனர். பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கடைக்குள் சிக்கிய ஊழியர்களை தீயணைப்புப் படையினர் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். 2 பிரமாண்ட ஏணிகள், 2 மீட்பு ஏணிகள், 3 ஆம்புலன்ஸ்கள், 25க்கும் மேற்பட்ட மெட்ரோ வாட்டர் டாங்கர்கள், 16 தீயணைப்பு வண்டிகள் மீட்பு மற்றும் தீயணைப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
தீயணைப்புப் படையினரின் தீவிர முயற்சியால் பக்கத்துக் கடைகளுக்கும் தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது. எனினும், இந்த விபத்தில் கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகின.
இந்த விபத்து காரணமாக ரங்கநாதன் தெருவில் உள்ள மற்ற கடைகள் திறக்கவில்லை. தீயணைப்பு வாகனங்களும், பொதுமக்களும் அதிகளவில் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால், வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன.
தீயணைப்புப் படையினரின் பலமணி நேரம் போராட்டம் காரணமாக தீ கட்டுப்படுத்தப்பட்டாலும், கட்டடத்துக்குள் தீ கனன்று கொண்டே இருந்தது. இதன் காரணமாக நேற்று நள்ளிரவில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது.
இதனால், தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து, விடிய விடிய போராடி தீயை கட்டுப்படுத்தினர்.
இதற்கிடையே, இந்த தீ விபத்தில் சிக்கி 2 ஊழியர்கள் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தீ முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டு, கடையில் குவிந்துள்ள சாம்பல் குவியல்கள் அப்புறப்படுத்தப்பட்ட பின்னரே பொருள் மற்றும் உயிர் சேத விபரங்கள் தெரியவரும் என கூறப்படுகிறது.
இந்த கட்டடத்தில் மாடியில் தங்கியிருந்த ஊழியர்கள் சமையல் செய்யும்போது, சமையல் எரிவாயு வெடித்து இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|