|
| அரிசி கடத்தினால் லைசென்ஸ் ரத்து: அரசு எச்சரிக்கை |
| சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 28 ஆகஸ்டு 2008 ( 18:13 IST ) | |
'அரிசி கடத்தலில் ஈடுபட்டால் வாகனங்களின் அனுமதிச் சீட்டுகள், பதிவுச் சான்றுகள் மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவை ரத்து செய்யப்படும்' என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரிசி கடத்தலை தடுக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அரசின் உத்தரவிற்கிணங்க, உணவு பொருள் வழங்கல் துறையினரின் ஒத்துழைப்புடன் இன்றியமையாப் பண்டங்களை கள்ளத்தனமாக வாகனங்களில் எடுத்துச் செல்வதை தடுக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
கள்ளத்தனமாக அரிசி கடத்த பயன்படுத்தப்படும் வாகனங்களின் அனுமதி, பதிவுச் சான்றுகள் மற்றும் ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்ய போக்குவரத்து துறையின் அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை போக்குவரத்துத் துறை அதிகாரிகளால் 198 அனுமதிச் சீட்டுகள், 165 பதிவுச் சான்றுகள் மற்றும் 188 ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
எனவே சரக்கு வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் ஆகியோர் இதுபோன்ற சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.
அவ்வாறு ஈடுபடும் வாகனங்களின் அனுமதிச் சீட்டுகள், பதிவுச் சான்றுகள் மற்றும் ஓட்டுநர்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|