|
| பல்கலை.யாக மாற்றம் : 1,500 கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக் |
| கோயம்புத்தூர் (ஏஜென்சி), 28 ஆகஸ்டு 2008 ( 16:16 IST ) | |
கோவை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை, பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அக்கல்லூரியின் 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று வகுப்புப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை அரசு கல்லூரியுடன் சேர்த்து தமிழகத்திலுள்ள 5 அரசு கல்லூரிகளையும், இரண்டு தனியார் கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களாக மாற்றுவதற்கு மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கு மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என பல்வேறு தரப்பிலிருந்து பலத்த எதிர்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில், வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்ட கோவை அரசு கல்லூரி மாணவர்கள், தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக மாற்றினால், இடஒதுக்கீடு இல்லாமல் போய்விடும், கல்விக் கட்டணம் உயர்த்தப்படும் என்பதால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்பதே அவர்களின் அச்சம்.
கடந்த மாதத்தில் இந்த விவகாரம் குறித்து விளக்குகையில், 'அரசு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களாக மாறினாலும் அனைத்து சலுகைகளும் தொடரும்' என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|