|
| விசைத்தறியாளர்களுடன் தமிழக அரசு இன்று பேச்சு |
| கோயம்புத்தூர் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 28 ஆகஸ்டு 2008 ( 14:28 IST ) | |
கோவை மாவட்டத்தில் விசைத்தறியாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் 13-வது நாளாக நீடித்துள்ள நிலையில், தமிழக அரசு இன்று 6-வது சுற்று பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தை, கைத்தறித்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், ஊரகத் தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அன்பரசன் ஆகியோர் முன்னிலையில் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இதில் தீர்வு கிடைக்காவிட்டால், கோவை, ஈரோடு மாவட்டங்களில் ஜவுளி தொழில் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக தொழில் துறையினர் கூறுகின்றனர்.
அதேநேரத்தில், இன்றைய பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்க வேண்டும் என ஜவுளித் துறையினர் எதிர்பார்த்துள்ளனர்.
ஜவுளி உற்பத்தியாளர்களிடம் நூறு விழுக்காடு கூலி உயர்வு கேட்டு கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் கடந்த 16-ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் முடங்கியுள்ளன. பலகோடி ரூபாய் மதிப்புள்ள காடா துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 4 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு முன்பு, தொழிலாளர் துணை ஆணையர் முன்னிலையில் 3 சுற்று பேச்சு நடந்தது. வேலைநிறுத்தம் தொடங்கியபின், ஊரகத் தொழில்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி 2 சுற்று பேச்சு நடத்தினார். இதிலும் உடன்பாடு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|