யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
திமுகவில் இணைந்தார் செல்வகணபதி!
சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 28 ஆகஸ்டு 2008   ( 13:52 IST )
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செல்வகணபதி இன்று திமுகவில் இணைந்தார்.

கடந்த 1991ம் ஆண்டு முதல் 96ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்தவர் செல்வகணபதி. அப்போது, சுடுகாடு கொட்டகை அமைத்ததில் ஊழல் செய்ததாக இவர் மீது அடுத்து வந்த திமுக ஆட்சிக் காலத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவர், கட்சியின் சேலம் புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளராகவும் இருந்து வந்தார்.

சேலம் மாவட்ட அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளை நியமனம் செய்த விவகாரத்தில் இவர் மீது புகார்கள் எழுந்தன.

இதன் எதிரொலியாக, இரு தினங்களுக்கு முன்பு, இவரை கட்சியிலிருந்து நீக்கி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார்.

இந்நிலையில், செல்வ கணபதி தனது ஆதரவாளர்களுடன் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மருத்துவமனைகளை கண்காணிக்க வேண்டும்: சரத்குமார்
பார்லி. தேர்தல்: தமிழகத்தில் சோனியா பிரசாரம்
ரேஷன் கார்டு அடி‌ப்படை‌யில் ‌சிமெ‌‌ண்‌ட்: கருணா‌நி‌தி உ‌த்தரவு
த‌‌மிழக‌த்‌தி‌ல் 2 நா‌ள் மழை : வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம்
பகலில் 10 முறை மி‌ன்வெ‌ட்டு: வைகோ கு‌ற்ற‌‌ச்சாட்டு
அதிக விலைக்கு டீசல் விற்றால் ப‌ங்‌க் உ‌ரிம‌ம் ர‌த்து: இ.கம்யூ.
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சத்யம்
அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'! முதலமைச்சர் கனவில்...
குசேலன்
சுப்பிரமணியபுரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய...
மேலும் படிக்க|மேலும்...