யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
மருத்துவமனைகளை கண்காணிக்க வேண்டும்: சரத்குமார்
சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 28 ஆகஸ்டு 2008   ( 11:29 IST )
தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளை அரசு கண்காணிக்க வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கு‌ற்ற‌ம் சா‌ட்டியு‌ள்ளா‌ர்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் சுகாதாரத் துறை மிகவும் கவலை அளிக்க கூடிய நிலையில் உள்ளது. இதை நிரூபிக்கும் வகையில் 2 சம்பவங்கள் நடந்துள்ளன.

முன்பு, தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகள் மரணமடைந்தனர். இப்போது, பெரம்பலூர் பகுதியில் இலவச கண் அறுவை சிகிச்சை செய்து கொண்ட சுமார் 29 பேர் பார்வை இழந்துள்ள அதிர்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.

இதுகுறித்து விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும்போதே, மேலும் 36 பேர் பார்வை இழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எந்தவிதமான முன் அனுமதியும் பெறாமல் இதுபோன்ற மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

தனியார் மருத்துவமனைகள் அதிகமாகவும், அரசு மருத்துவமனைகள் மிகக்குறைவாகவும் உள்ள தமிழகத்தில், மக்களின் அடிப்படை தேவைகளை, சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டிய கடமை மாநில அரசுக்கு உண்டு.

ஆனால், ஒவ்வொரு முறையும் பெரிய அளவில் மக்கள் பாதிக்கப்பட்ட பின்னர் அவர்களுக்கு நிதி உதவி அளிப்பதும், பின்னர் நிபுணர் குழு அமைத்து காரணங்களை ஆராய்வதும் நியாயமல்ல.

இதுபோன்ற பாதிப்புகளுக்கு தமிழக அரசே முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பார்லி. தேர்தல்: தமிழகத்தில் சோனியா பிரசாரம்
ரேஷன் கார்டு அடி‌ப்படை‌யில் ‌சிமெ‌‌ண்‌ட்: கருணா‌நி‌தி உ‌த்தரவு
த‌‌மிழக‌த்‌தி‌ல் 2 நா‌ள் மழை : வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம்
பகலில் 10 முறை மி‌ன்வெ‌ட்டு: வைகோ கு‌ற்ற‌‌ச்சாட்டு
அதிக விலைக்கு டீசல் விற்றால் ப‌ங்‌க் உ‌ரிம‌ம் ர‌த்து: இ.கம்யூ.
இலவச முகாம்: மேலும் 22 பேர் பார்வை இழந்தனர்!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சத்யம்
அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'! முதலமைச்சர் கனவில்...
குசேலன்
சுப்பிரமணியபுரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய...
மேலும் படிக்க|மேலும்...