|
| பார்லி. தேர்தல்: தமிழகத்தில் சோனியா பிரசாரம் |
| சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 28 ஆகஸ்டு 2008 ( 10:33 IST ) | |
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மாதம்தோறும் தமிழகம் வந்து பொதுக்கூட்டங்களில் பங்கேற்கவுள்ளார்.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு நிருபர்களிடம் கூறியதாவது:
அடுத்தமாதம் 4 மற்றும் 5ம் தேதிகளில் சென்னை, சேலம், ஈரோடு பகுதிகளில் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் காங்கிரஸ் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் தமிழகம் வருகின்றனர்.
ஈரோட்டில் அடுத்த மாதம் 4ம் தேதி நடைபெறவுள்ள காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
5ம் தேதி நடைபெறும் சென்னை பல்கலைக்கழகத்தின் 150வது ஆண்டு நிறைவு விழா மற்றும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி, முதல்வர் கருணாநிதி ஆகியோர் பங்கேற்கின்றனர். இதில் அவர்களுக்கு சென்னை பல்கலைக் கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் சோனியாகாந்தியை அழைத்து 5 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிட்டிருந்தோம். அதன்படி காரைக்குடியில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
தற்போது ஈரோட்டில் நடத்தப்படுகிறது. திருச்சி, மதுரை, நெல்லையிலும் விரைவில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும்.
மாதம்தோறும் சோனியாகாந்தி தமிழகம் வந்து பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார். தேர்தல் நேரத்திலும் சென்னையில் பிரமாண்ட பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும். அதில் சோனியா மற்றும் கூட்டணி கட்சி தலைவர் பங்கேற்பர்.
காங்கிரஸ் கூட்டணியை பாமக விரும்புகிறது. எனவே கூட்டணியை விட்டு ராமதாஸ் விலக மாட்டார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|