யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
தோழமைக்கு மாறான செயல்படுகிறது கம்யூ. : கருணாநிதி
சென்னை( ஏஜென்சி), 21 ஆகஸ்டு 2008   ( 18:06 IST )
கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டுமே தோழமைக்கு மாறாசெயல்படுவதாகவும், பிரச்சனைகளை ஊதி பெரிதாக்குவதாகவும் தமிழக முதலமைச்சர் ருணாநிதி குற்றம் சாற்றியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி - பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திமுக உறவு குறித்து தங்கள் கட்சிகளின் மாநிலக் குழுவில் கலந்து பேசி முடிவு அறிவிக்கப்படும் என்று இடதுசாரி தலைவர்கள் தெரிவித்துள்ள நிலையில் பொருளாளர் ஆற்காடு வீராசாமி, கம்யூனிஸ்ட் கட்சிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்கள் என்று பேசியிருப்பது சற்று அளவுக்கு மீறியது மட்டுமல்ல, நாம் கடைபிடித்து வரும் அணுகுமுறைகளுக்கும் முரணானது.

அண்மைக் காலமாகவே இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுமே திமுக கொண்டிருந்த தோழமைக்கு முற்றிலும் மாறான செய்திகளை வெளியிடுவதும்,கேலிச் சித்திரங்களை வரைவதும் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.சில பிரச்சனைகளை ஊதி பெரிதாக்குகிறார்கள்.

திமுக‌வின‌ர் யாராயினும் குறிப்பாக ‌திமுக உட‌ன் தோழமை கொண்ட கட்சிகளைப் பற்றி, அவர்கள் எடுக்கும் முடிவினை அறிந்து, அதன் பின்னர் ‌திமுக தலைமைக் குழுவில் ஒரு முடிவெடுத்து அறிவிக்கும் வரையில் அவசரப்பட்டு விமர்சனங்களில் ஈடுபட வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன்.

கூட்டணிக் கட்சிகளாயிருந்தபோது கொண்டிருந்த நட்பையும், ஒருவருக்கொருவர் துணையாக இருந்து உதவிக் கொண்ட நன்றியுணர்வையும், திடீர் மாற்றங்கள் எனும் தீயில் கருகிட விட்டு விடக்கூடாது.

மார்க்சிஸ்ட் எம்.பி. டி.கே.ரங்கராஜன், பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகும் பா.ஜனதாவுடன் திமுக தேர்தல் உறவு கொண்டது நியாயம்தானா என்று கேட்டிருக்கிறார்.காலத்துக்கு காலம், இடத்துக்கு இடம், மாநிலத்துக்கு மாநிலம் முரண்பாடு கொண்ட கூட்டணிகள் எவை? எவை? அவை எப்போது என்ற விவாதத்துக்கு நான் தயார்.

பா.ஜனதாவுதன் வுடன் திமுக அணி சேர்ந்தபோது குறைந்தபட்ச செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு அதில் இரு தரப்பிலும் கையெழுத்திடப்பட்டது. அந்த திட்டத்தில் மதச்சார்பு அரசியலுக்கு இடமில்லை.அதிலிருந்து அவர்கள் விலகியபோது பா.ஜனதா அணியிலிருந்து திமுக வெளியேறிவிட்டது.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஆ‌ற்காடு பே‌ச்சுக்கு மா‌ர்‌க்‌சி‌‌ஸ்‌ட் க‌ண்டன‌ம்
சந்தர்ப்பவாதம்: இடதுசாரிகள் மீது காங். காட்டம்
மாணவி மர்மசாவு: சிபிசிஐடி விசாரணைக்கு முதல்வர் உத்தரவு
வரும் தேர்தலில் கம்யூ. காணாமல் போய்விடும்: ஆற்காடு வீராசாமி
ஊதிய கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த அலுவலர் குழு
சிங்கம்புணரியில் நாளை அதிமுக ஆர்ப்பாட்டம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கடினமான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
குசேலன்
முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி...
சுப்பிரமணியபுரம்
வல்லமை தாராயோ
ஆரோக்கியம்
நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்...
மேலும் படிக்க|மேலும்...