யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
வரும் தேர்தலில் கம்யூ. காணாமல் போய்விடும்: ஆற்காடு வீராசாமி
சென்னை (ஏஜென்சி), 21 ஆகஸ்டு 2008   ( 11:00 IST )
அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்த இடதுசாரி கட்சிகள் வரும் மக்களவைத் தேர்தலில் காணாமல் போவார்கள் என்று தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.

சென்னை - தியாகராய நகரில் 'ராஜீவ்காந்தி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நாள்' விழாவில் நேற்று அவர் பேசியதாவது:

இந்தியாவில் 80 ஆயிரம் கிராமம் மின்சாரமே தெரியாமல் வாழ்கிறார்கள். அனைத்து கிராமமும் மின்சாரம் பெற்றது தமிழ்நாட்டில்தான். அனல் மின்சாரத்தை நம்பினால் நமது நாடு முன்னேறாது. எனவேதான் அணுசக்தி ஒப்பந்தம் உருவானது. அந்த ஒப்பந்தத்துக்கு இடதுசாரிகளும், மதவாத சக்திகளும் குறை கூறினர்.

அணுசக்தி இருந்தால்தான் மின் உற்பத்தியை 4 லட்சம் மெகாவாட்டாக உயர்த்த முடியும். 2 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்திக்கு 1998-ம் ஆண்டு கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ரஷியாவுடன் ஒப்பந்தம் போடப்பட்டது. கட்டடம் கட்டி முடித்தும், இயந்திரங்கள் அனைத்தும் வைக்கப்பட்டும் மின் உற்பத்தி தொடங்கவில்லை.

இதற்குக் காரணம், யுரேனியம் இல்லாததுதான். 200-ம் ஆண்டு பிப்ரவரியில் 1000 மெகாவாட்டும், டிசம்பர் மாதம் 1000 மெகாவாட்டும் மின் உற்பத்தி செய்வதாக கூறியிருக்கிறார்கள்.

ரஷியாவில் இருந்து வந்தால் மின் உற்பத்தி செய்யலாம். அமெரிக்காவில் இருந்து வந்தால் செய்யக்கூடாதா?

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால் மின் உற்பத்தியில் தன்னிறைவு பெற்று வல்லரசாக இந்தியா உருவாகும். இதை சீனா விரும்பவில்லை.

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்ப்பதன் மூலம் சீனாவுடன் இடதுசாரிகள் மறைமுகமாகச் சதி செய்கிறார்கள் என்கிற சந்தேகம் எழுகிறது.

அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எதிராக வாக்களித்தவர்கள் இருந்த இடம் தெரியாமல் போவார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 60 இடங்களைப் பெற்ற கட்சிகள் (இடதுசாரிகள்), வரும் தேர்தலில் 30 இடங்களைக் கூடப் பெறுவார்களா எனத் தெரியாது, என்றார் அமைச்சர் ஆற்காடு வீராசாமி.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மாணவி மர்மசாவு: சிபிசிஐடி விசாரணைக்கு முதல்வர் உத்தரவு
ஊதிய கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த அலுவலர் குழு
சிங்கம்புணரியில் நாளை அதிமுக ஆர்ப்பாட்டம்
சென்னையை குபேரர் நகரமாக்க சி.ஐ.ஐ. முயற்சி: ராமதாஸ்
தொடரும் டீசல் தட்டுப்பாடு: அரசு இன்று ஆலோசனை
கச்சத்தீவு : மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கடினமான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
குசேலன்
முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி...
சுப்பிரமணியபுரம்
வல்லமை தாராயோ
ஆரோக்கியம்
நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்...
மேலும் படிக்க|மேலும்...