|
| ஊதிய கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த அலுவலர் குழு |
| சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 21 ஆகஸ்டு 2008 ( 10:44 IST ) | |
மத்திய அரசின் 6-வது ஊதிய கமிஷன் பரிந்துரைகளை, மாநில அரசு ஊழியர்களுக்கு நடைமுறைப்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்க, 4 பேர் கொண்ட அலுவலர் குழுவினை தமிழக அரசு அமைத்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
மத்திய அரசின் ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள் மற்றும் இதர படிகள் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளைத் தொடர்ந்து, இம்மாநில அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்க இந்த அரசு 'அலுவலர் குழு' ஒன்றை அமைத்துள்ளது.
இவ்வலுவலர் குழுவானது, உள்துறையின் செயலாளர் தலைமையில், நிதித்துறை, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை, பள்ளிக் கல்வித்துறை ஆகியவற்றின் முதன்மைச் செயலாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டு செயல்படும்.
இந்த 'அலுவலர் குழு', மத்திய அரசின் ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ள, திருத்திய ஊதிய விகிதங்கள் மற்றும் இதரப் படிகள் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளை ஆராய்ந்து, அவற்றை தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கும் மேற்கொள்ளத்தக்க வகையில் பரிந்துரைகளை வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இந்த அலுவலர் குழு, மத்திய அரசு பரிந்துரைத்துள்ள திருத்திய ஓய்வூதியம் - குடும்ப ஓய்வூதியம் மற்றும் திருத்திய ஓய்வுக் கால பயன்கள் குறித்து ஆராய்ந்து அவற்றை தமிழக அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் அலுவலர்களுக்கு விரிவுபடுத்துவது குறித்தும் தக்க பரிந்துரைகள் அளிக்கக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட அலுவலர் மற்றும் ஏனைய சங்கங்கள், இவ்வலுவலர் குழுவிற்கு ஊதிய விகித திருத்தம் குறித்த தங்கள் கோரிக்கையை அனுப்பி வைக்கலாம். இக்குழு தனது அறிக்கையை மூன்று மாத காலத்துக்கு அரசுக்கு அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக, அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில்
அந்தஸ்து உயரும். கடினமான... |
| |
|
|
|
|
 | | | குசேலன் | | முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்... |
| |
|
|
|
|
|
|
|