யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
சிங்கம்புணரியில் நாளை அதிமுக ஆர்ப்பாட்டம்
சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 21 ஆகஸ்டு 2008   ( 10:31 IST )
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதி சிங்கம்புணரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், தொழில்நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றிற்கான சொத்து வரியை பேரூராட்சி நிர்வாகம் பன்மடங்கு உயர்த்தியுள்ளது.

ஏற்கனவே சுகாதாரமின்மை, கடும் குடிநீர் தட்டுப்பாடு, மின்சாரவெட்டு என பல்வேறு இன்னல்களை சந்தித்து கொண்டிருக்கின்ற மக்கள் மீது மேலும் நிதிச்சுமையை திணிப்பது கடும் கண்டனத்திற்குரியது. இதனால் இப்பகுதியில் உள்ள ஏழை, எளிய நடுத்தர மக்கள் உள்பட அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிங்கம்புணரி பேரூராட்சி மற்றும் அதை சுற்றியுள்ள ஊராட்சிகளில் கடும் குடிநீர்த்தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண திமுக அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சிங்கம்புணரி பேரூராட்சி பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வீடுகள், தொழில் நிறுவனங்கள் தொழிற்சாலைகள் ஆகியவற்றின் மீதான வரியை அநியாயமாக உயர்த்தியுள்ள பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து, சிவகங்கை மாவட்ட அதிமுக சார்பில் 22 -ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் சிங்கம்புணரி பேரூராட்சி பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்னையை குபேரர் நகரமாக்க சி.ஐ.ஐ. முயற்சி: ராமதாஸ்
தொடரும் டீசல் தட்டுப்பாடு: அரசு இன்று ஆலோசனை
கச்சத்தீவு : மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
ந‌ளி‌னி வழ‌க்கு: த‌மிழக அரசு‌க்கு ஐகோர்ட் உ‌த்தரவு
திமுக முப்பெரும் விழா: கருணாநிதிக்கு பெரியார் விருது!
பழனி அருகே சாலை விபத்தில் 8 பேர் பலி!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கடினமான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
குசேலன்
முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி...
சுப்பிரமணியபுரம்
வல்லமை தாராயோ
ஆரோக்கியம்
நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்...
மேலும் படிக்க|மேலும்...