யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
சென்னையை குபேரர் நகரமாக்க சி.ஐ.ஐ. முயற்சி: ராமதாஸ்
சென்னை (ஏஜென்சி), 21 ஆகஸ்டு 2008   ( 10:25 IST )
சென்னையை குபேரர் நகரமாக்கும் முயற்சியில் சி.ஐ.ஐ. என்றழைக்கப்படும் ந்திய தொழிலகக் கூட்டமைப்பு இறங்கியுள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னை நகரம் எதிர்கொள்ள இருக்கும் சிக்கல்களைத் தீர்த்து வைப்பதற்கு ஒருங்கிணைந்த தீர்வு தேவைப்படுகிறது; இதற்கு அரசும் தனியாரும் கூட்டாகப் பங்கேற்கும் செயல் முறையிலான முன் மாதிரித் திட்டமே நிலைத்த தீர்வாக இருக்கும் என்று சி.ஐ.ஐ. சென்னை மண்டலத் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதற்காக 'சென்னைத் திட்ட விளக்கம் - 3' என்ற அறிக்கையை அவர் வெளியிட்டிருக்கிறார். இந்தத் திட்டம் குறித்து தொழிலதிபர்கள் சென்னையில் வரும் வெள்ளிக்கிழமை (ஆக. 22) கூடி விவாதிக்கின்றனர்.

'கனவுத் திட்டத்திலிருந்து செயல் திட்ட இயக்கத்துக்கு முன்னேறுதல்' என்ற பெயரில் சென்னை நகரைச் சுற்றி 5 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு நிலத்தை வளைத்துப் போடத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அவர்களது செயல்திட்ட விளக்கத்தைப் பார்க்கும்போது, சென்னை நகரை ஒரு குபேரர்கள் நகரம் ஆக மாற்றுவதற்கு அடித்தளம் அமைக்கும் திட்டமாகவே அது தோன்றுகிறது.

இந்த மெகாத் திட்டங்கள் எல்லாமே பணக்காரர்களுக்கும் உயர் வருவாய்ப் பிரிவினருக்கும் உரியவை. பணக்காரர்கள் மேலும் பெரும் பணக்காரர்கள் ஆவதற்கும் ஏழைகள் மேலும் பரம ஏழைகள் ஆவதற்கும் இத்திட்டங்கள் வழி வகுக்கும்.

அதிகரித்து வரும் பணவீக்கம், வேலையின்மை, இதனால் ஏழைகள் படும் துன்பம் ஆகியவை அனைத்தும் இந்தியத் தொழிலகக் கூட்டமைப்புக்கு ஆதரவான கொள்கைகளின் விளைவு என்றால் மிகையாகாது.

வீடு என்பது குறைந்த வருவாய் மற்றும் நடுத்தர வருவாய்ப் பிரிவினர் சொந்தமாக வாங்க முடியாத விலை மதிப்பற்ற பொருளாகிவிட்டது. ஏழைகளையும் உழவர்களையும் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

இவர்களது வீட்டுத் தேவையை நிறைவு செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், கடந்த சில ஆண்டுகளாக ஏறக்குறைய தனது செயல்பாட்டை முடக்கிக் கொண்டுள்ளது.

எப்போதோ கட்டி முடித்த அடுக்குமாடிக் குடியிருப்புகளையும வளைத்துப் போட்டுள்ள மனைகளையும் விற்கும் பணியை மட்டுமே வீட்டு வசதி வாரியம் செய்து கொண்டிருக்கிறது. இதனால் அடித்தட்டு மக்களுக்கு சொந்த வீடு என்பது கானல் நீராக இருந்து கொண்டிருக்கிறது. திமுக அரசு இது குறித்து சிந்தித்துச் செயல்படுவதாகத் தெரியவில்லை.

இந்நிலையில், இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பின் செயல் திட்டத்தைத்தான் தொழில் வளர்ச்சி என்ற பெயரில் திமுக அரசு பின்பற்றி வருகிறது. மக்கள் தொகையில் 4 முதல் 5 சதவீதம் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்தச் செயல் திட்டம் பயன்படும்.

எனவே, திமுக அரசின் ஆசியுடன் நிறைவேற்றப்பட இருக்கும் இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் 'மேட்டுக்குடி' வளர்ச்சித் திட்ட மாதிரியை, பிற அரசியல் கட்சிகளுடன் இணைந்து முறியடிக்க பாமக பாடுபடும் என்று ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தொடரும் டீசல் தட்டுப்பாடு: அரசு இன்று ஆலோசனை
கச்சத்தீவு : மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
ந‌ளி‌னி வழ‌க்கு: த‌மிழக அரசு‌க்கு ஐகோர்ட் உ‌த்தரவு
திமுக முப்பெரும் விழா: கருணாநிதிக்கு பெரியார் விருது!
பழனி அருகே சாலை விபத்தில் 8 பேர் பலி!
ஒகேனக்கல் குறித்து பிரதமர் முன்னிலையில் பேச்சு :எடியூரப்பா
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கடினமான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
குசேலன்
முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி...
சுப்பிரமணியபுரம்
வல்லமை தாராயோ
ஆரோக்கியம்
நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்...
மேலும் படிக்க|மேலும்...