|
| தொடரும் டீசல் தட்டுப்பாடு: அரசு இன்று ஆலோசனை |
| சென்னை (ஏஜென்சி), 21 ஆகஸ்டு 2008 ( 10:13 IST ) | |
சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 5-வது நாளாக டீசல் தட்டுப்பாடு தொடர்ந்துள்ள நிலையில், இதுகுறித்து பெட்ரோலிய நிறுவனங்களுடன் தமிழக அரசு இன்று ஆலோசனை நடத்துகிறது.
இதுகுறித்து தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி கூறுகையில்,"டீசல் தட்டுப்பாடு இல்லையென்று மத்திய அரசு கூறுகிறது. இருப்பினும், டீசல் தட்டுப்பாடு இருப்பதாக செய்திகள் வருகின்றன. இதுபற்றி, பெட்ரோலிய நிறுவன அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தப்படும்'' என்றார்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த 5 நாட்களாக இருந்து வரும் டீசல் தட்டுப்பாட்டால் லாரி, வேன் ஓட்டுநர்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் இந்நிலை தொடர்ந்து வருகிறது.
பூந்தமல்லி, அண்ணாநகர், அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 'டீசல் இருப்பு இல்லை' என்று நேற்று அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருந்தன.
சென்னை நகரில் தொடர்ந்து டீசல் தட்டுப்பாடு இருப்பதால், சமையல் எரிவாயு வினியோகத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், லாரிகள் மற்றும் வேன்கள் உரிமையாளர்களுக்கு உரிய அளவில் டீசல் கிடைக்காததால் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
டீசல் இருப்பு உள்ள பங்க்-குகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்று டீசல் நிரப்பிச் செல்வதால், ஆங்காங்கே போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது.
இந்தச் சூழலில், டெல்லி மற்றும் சென்னையில் உள்ள பெட்ரோலிய நிறுவன அதிகாரிகளுடன் தமிழக அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில்
அந்தஸ்து உயரும். கடினமான... |
| |
|
|
|
|
 | | | குசேலன் | | முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்... |
| |
|
|
|
|
|
|
|