யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
கச்சத்தீவு : மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 21 ஆகஸ்டு 2008   ( 09:52 IST )
கச்சத்தீவு தொடர்பாக இந்தியா, இலங்கை இடையே 1974-ல் ஏற்பட்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ம், இதுகுறித்து பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

வளசரவாக்கத்தைச் சேர்ந்த பாண்டி லஷ்மி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

கச்சத்தீவு தொடர்பாக இந்திய பிரதமர் இந்திரா காந்தி, இலங்கை பிரதமர் பண்டார நாயகா ஆகியோரிடையே 1974, ஜூன் 28-ல் உடன்பாடு கையெழுத்தானது. இரு நாடுகள் இடையே பாக் நீரிணைப்பு கடல் எல்லையை இது தீர்மானிக்கிறது.

இந்திய மீனவர்கள் கச்சத்தீவை சுற்றிலும் மீன்பிடிக்கவும், அங்கு வலைகளை காய வைக்கவும், தீவில் உள்ள கிறிஸ்துவ ஆலயத்திற்குச் சென்று வழிபடவும் ஒப்பந்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த உடன்பாட்டை இலங்கை அரசு 1985-ல் முறித்தது. இந்திய மீனவர்களை கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கவிடாமல் இலங்கை கடற்படையினர் தடுத்தனர். கச்சத்தீவில் வலைகளை காய வைக்கவும் அனுமதிக்கவில்லை. பாதுகாப்பை இலங்கை அரசு காரணமாக காட்டியது. அதனை இந்தியா ஆட்சேபிக்கவில்லை.

நாளாக, நாளாக இந்திய மீனவர்கள் குறிப்பாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

கடந்த 1990-க்கு பின் புயல், காற்று காரணமாகக் கச்சத்தீவு அருகே ஒதுங்கிய மீனவர்கள் மீது இலங்கை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதுவரை 900 மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்திய மீனவர்களின் கலாசார உரிமை பாதுகாக்கப்படும் என நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டது. கச்சத்தீவு அருகில் மீன்பிடிக்கும் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே, 1974-ல் ஏற்பட்ட ஒப்பந்தத்தை செயல்படுத்த உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

இம்மனு மீது நேற்று விசாரணை நடத்திய தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி, நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா ஆகியோர் கொண்ட பெஞ்ச், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும், பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ந‌ளி‌னி வழ‌க்கு: த‌மிழக அரசு‌க்கு ஐகோர்ட் உ‌த்தரவு
திமுக முப்பெரும் விழா: கருணாநிதிக்கு பெரியார் விருது!
பழனி அருகே சாலை விபத்தில் 8 பேர் பலி!
ஒகேனக்கல் குறித்து பிரதமர் முன்னிலையில் பேச்சு :எடியூரப்பா
வேலைநிறுத்தம் : இயல்பு வாழக்கையில் பாதிப்பில்லை
நடுவ‌ட்ட‌ம்: அதிமுக நாளை ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கடினமான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
குசேலன்
முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி...
சுப்பிரமணியபுரம்
வல்லமை தாராயோ
ஆரோக்கியம்
நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்...
மேலும் படிக்க|மேலும்...