|
| நளினி வழக்கு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு |
| சென்னை (ஏஜென்சி), புதன்கிழமை, 20 ஆகஸ்டு 2008 ( 19:35 IST ) | |
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி விடுதலை செய்யக்கோரி தொடர்ந்த வழக்கில், விரைவில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நளினி, தன்னை விடுதலைச் செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் 2 ரிட் மனுக்களை தாக்கல் செய்திருந்தார்.
முதல் மனு கடந்த 2006ம் ஆண்டும், 2வது மனு இந்த ஆண்டிலும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஏ.நாகமுத்து முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் ஆஜராகி, இவ்வழக்கில் தலைமை வழக்கறிஞர் (அட்வகேட் ஜெனரல்) இன்று வராததால் விசாரணையை தள்ளி வைக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதி, 2 ஆண்டுகளுக்கு முன்பு நளினி தொடர்ந்த இந்த வழக்கில் இதுவரை விசாரணை தொடங்கப்படவில்லை. சமீபத்தில் தொடர்ந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை.
எனவே இந்த வழக்கில் விரைந்து பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அடுத்தமுறை பதில் மனு தாக்கல் செய்யாவிட்டால் தகுதி அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்று கண்டிப்புடன் கூறினார்.
வழக்கு விசாரணை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில்
அந்தஸ்து உயரும். கடினமான... |
| |
|
|
|
|
 | | | குசேலன் | | முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்... |
| |
|
|
|
|
|
|
|