|
| திமுக முப்பெரும் விழா: கருணாநிதிக்கு பெரியார் விருது! |
| சென்னை (ஏஜென்சி), புதன்கிழமை, 20 ஆகஸ்டு 2008 ( 19:20 IST ) | |
அண்ணாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சியில் அடுத்த மாதம் நடத்தப்பட உள்ள முப்பெரும் விழாவில் முதலமைச்சர் கருணாநிதிக்கு பெரியார் விருது வழங்கப்படுகிறது.
திமுக சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் திமுக தொடக்க விழா,அண்ணா பிறந்த நாள் விழா,பெரியார் பிறந்த நாள் விழா ஆகிய 3 விழாக்களையும் ஒருங்கிணைத்து முப்பெரும் விழா நடத்தப்பட்டு வருகிறது.இந்த ஆண்டுக்கான முப்பெரும் விழா வருகிற செப்டம்பர் மாதம் 21 ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ளது.
இந்த முப்பெரும் விழாவின் போது திமுகவில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பெரியார் விருது,அண்ணா விருது,கலைஞர் விருது,பாவேந்தர் பாரதிதாசன் விருதுகள் வழங்கப்படுகிறது.
அண்ணாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த ஆண்டு திமுக நடத்தும் முப்பெரும் விழாவில் சிறப்பு விருதுகள் பெறுபவர்கள் பட்டியலை திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் இன்று வெளியிட்டார்.
பெரியார் விருது முதலமைச்சர் கருணாநிதிக்கும்,அண்ணா விருது கட்சியின் பொருளாளரும், மின்சாரத்துறை அமைச்சருமான ஆற்காடு வீராசாமிக்கும் வழங்கப்படுகிறது.
கலைஞர் விருது உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும்,பாவேந்தர் பாரதிதாசன் விருது பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகனுக்கும் வழங்கப்படுகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில்
அந்தஸ்து உயரும். கடினமான... |
| |
|
|
|
|
 | | | குசேலன் | | முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்... |
| |
|
|
|
|
|
|
|