|
| ஒகேனக்கல் குறித்து பிரதமர் முன்னிலையில் பேச்சு :எடியூரப்பா |
| சென்னை (ஏஜென்சி), புதன்கிழமை, 20 ஆகஸ்டு 2008 ( 17:12 IST ) | |
ஒகேனக்கல் கூட்டுக் குடி நீர் திட்டம் தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு காண பிரதமர் முன்னிலையில் இரு மாநில முதலமைச்சர்களும் பேச்சு நடத்த வேண்டும் என கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இதனை தெரிவித்த அவர், அண்டை மாநிலங்களுடன் நல்லுறவு வைத்துக் கொள்ளவே தாம் எப்போதும் விரும்புவதாக கூறினார்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன் பிரதமர் மன்மோகன் சிங்கை தாம் சந்தித்தபோதே, ஒகேனக்கல் திட்டம் தொடர்பான பிரச்சனையில் கர்நாடகத்தின் நிலையை தாம் விளக்கியதாகவும, அப்போது அவரது முன்னிலையில் இப்பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு காண முதலமைச்சர் மட்டத்திலான பேச்சு நடத்தலாம் என தாம் யோசனை தெரிவித்ததாக எடியூரப்பா கூறினார்.
மேலும் இப்பிரச்சனையில் முடிவெடுக்க வேண்டியது பிரதமர்தான் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில்
அந்தஸ்து உயரும். கடினமான... |
| |
|
|
|
|
 | | | குசேலன் | | முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்... |
| |
|
|
|
|
|
|
|