|
| வேலைநிறுத்தம் : இயல்பு வாழக்கையில் பாதிப்பில்லை |
| சென்னை (ஏஜென்சி), புதன்கிழமை, 20 ஆகஸ்டு 2008 ( 12:24 IST ) | |
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய அளவில் இடதுசாரி தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் இதனால் குறிப்பிடத்தக்க அளவில் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏதுமில்லை.
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தார்மீக ஆதரவு அளிப்பதாக ஆளும் திமுக தொழிற்சங்கம் அறிவித்துள்ள போதிலும், பேருந்து போக்குவரத்து வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால், மாநிலம் முழுவதும் பேருந்து போக்குவரத்தில் எவ்வித பாதிப்பும் இதுவரை ஏற்படவில்லை.
அதேபோல், ரயில் போக்குவரத்தில் குறிப்பிடத்தக்க பாதிப்பு இல்லை என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இடதுசாரி தொழிற்சங்கத்தினர் ரயில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரத்தில், காவல்துறையினரின் துரித நடவடிக்கையால், ரயில் சேவையில் பாதிப்பு ஏற்படாத வகையில் கண்காணிக்கப்படுகிறது.
இதனிடையே, இடதுசாரிகள் ஆளும் கேரளாவில் போராட்டங்களுக்கு முழு ஆதரவு இருந்து வருவதாலும், அங்கு ரயில் மறியல் நடத்தப்படுவதாலும், அம்மாநிலத்தில் இருந்து தமிழகம் வரும் ரயில்கள் ஆங்காங்கே மறிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை உள்ளிட்ட நகரங்களில் இன்று காலை முதல் லாரிகள் மற்றும் ஆட்டோக்கள் பெரும்பாலும் ஓடவில்லை.
மாநிலத்தின் அனைத்து முக்கிய இடங்களிலும் அடையாள மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைகளில் உள்ள பாதக அம்சங்களை நீக்குதல், புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தைத் தொடர்தல், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியே இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது.
இதில் ஏஐடியூசி, சிஐடியூ, எச்எம்எஸ், ஏஐயுடியுசி, ஏஐசிசடியூ, யுடியுசி, டியூசிசி ஆகிய 7 இடதுசாரி தொழிற்சங்கள் பங்கேற்றுள்ளன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில்
அந்தஸ்து உயரும். கடினமான... |
| |
|
|
|
|
 | | | குசேலன் | | முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்... |
| |
|
|
|
|
|
|
|