|
| நடுவட்டம்: அதிமுக நாளை ஆர்ப்பாட்டம் |
| சென்னை (ஏஜென்சி), புதன்கிழமை, 20 ஆகஸ்டு 2008 ( 11:49 IST ) | |
பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாத நீலகிரி மாவட்டத்திலுள்ள நடுவட்டம் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:
நீலகிரி மாவட்டம் நடுவட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை நடுவட்டம் பேரூராட்சி நிர்வாகம் நிறைவேற்றவில்லை.
இதை கண்டித்தும், மக்களின் அத்தியாவசிய தேவைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும் நீலகிரி மாவட்டக் கழகத்தின் சார்பில் வரும் 21ம் தேதி (நாளை) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
நடுவட்டம் வனத்துறை அலுவலகத்தில் இருந்து பேரணியாகப் புறப்பட்டு நடுவட்டம் பேரூராட்சி அலுவலகம் வந்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில்
அந்தஸ்து உயரும். கடினமான... |
| |
|
|
|
|
 | | | குசேலன் | | முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்... |
| |
|
|
|
|
|
|
|