யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
ரயில் மறியல்: கம்யூ. தொழிற்சங்கத்தினர் உள்பட 215 பேர் கைது
திருவாரூர் (ஏஜென்சி), புதன்கிழமை, 20 ஆகஸ்டு 2008   ( 11:50 IST )
திருவாரூர் மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் மற்றும் இடதுசாரி தொழிற்சங்கத்தினர் 215 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைகளில் உள்ள பாதக அம்சங்களை நீக்குதல், புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தைத் தொடர்தல், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இடதுசாரி ஆதரவு தொழிற்சங்கள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், திருவாரூரில் ஐந்து இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர்.

அப்போது, மார்க்சிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் உலகநாதன் உள்பட 150 பேரை, காவல்துறையினர் கைது செய்தனர்.

அதேபோல், வேலூரில் பிருந்தாவன எக்ஸ்பிரஸ் ரயிலை மறிக்க முயன்ற ஏஐடியுசி தொழிற்சங்க உறுப்பினர்கள் 65 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் பலர் ரயில் மறியலில் ஈடுபட்டிருப்பதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நடுவ‌ட்ட‌ம்: அதிமுக நாளை ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்
சோனியா, மன்மோகன், கருணாநிதிக்கு டாக்டர் பட்டம்!
செப்டம்பரில் புகைப்பட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் : சரத்குமார் கோரிக்கை
தமிழகத்தில் மழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம்
கம்யூ. வேலை நிறுத்தம்: இயல்பு வாழ்க்கை பாதிக்குமா?
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கடினமான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
குசேலன்
முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி...
சுப்பிரமணியபுரம்
வல்லமை தாராயோ
ஆரோக்கியம்
நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்...
மேலும் படிக்க|மேலும்...