யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் : சரத்குமார் கோரிக்கை
சென்னை (ஏஜென்சி), 20 ஆகஸ்டு 2008   ( 11:25 IST )
கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்களுக்கு, கூலி உயர்வு கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்களிடம் நூறு சதவித கூலி உயர்வு கேட்டு கடந்த 16-ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு, ஆதரவு தெரிவித்து கோவை மாவட்ட சொந்த விசைத்தறி துணி உற்பத்தியாளர்களும் செவ்வாய்க்கிழமை முதல் ஒரு வார வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக பல்லடம், சோமனூர், அவினாசி, திருப்பூர், மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 லட்சம் விசைத்தறிகள் இயங்கவில்லை. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

மேலும் விசைத்தறி தொழிலாளர்களுக்கு கடந்த 20 ஆண்டுகளாக, நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ. 100 மட்டுமே கூலி வழங்கப்படுகிறது. மற்ற தொழிலாளர்களுடன் ஒப்பிடும்போது இவர்களுக்கு வழங்கப்படும் கூலி மிகவும் குறைவு.

விசைத்தறி உரிமையாளர்கள் தங்களுக்கு கிடைக்கும் கூலியில் மூன்றில் ஒரு பங்கை தொழிலாளர்களுக்கு ஊதியமாக வழங்குகின்றனர். எனவே, உரிமையாளர்களுக்கு கூடுதல் கூலி கிடைப்பதால் லட்சக்கணக்கான தொழிலாளர்களும் பயன் பெறுவர் என்பதால், இப்பிரச்னையில் அரசு உடனடியாக தலையிட்டுத் தீர்வு காண வேண்டும்.

மேலும், வேலைநிறுத்த கால வருவாய் இழப்பை ஈடுசெய்யும் வகையில் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் சரத்குமார் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சோனியா, மன்மோகன், கருணாநிதிக்கு டாக்டர் பட்டம்!
செப்டம்பரில் புகைப்பட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
தமிழகத்தில் மழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம்
கம்யூ. வேலை நிறுத்தம்: இயல்பு வாழ்க்கை பாதிக்குமா?
செப்.5ல் சோனியா, மன்மோகன் சென்னை வருகை
வி.சிறுத்தைகள் மோதல் : திருமா வருத்தம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கடினமான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
குசேலன்
முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி...
சுப்பிரமணியபுரம்
வல்லமை தாராயோ
ஆரோக்கியம்
நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்...
மேலும் படிக்க|மேலும்...