யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
தமிழகத்தில் மழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம்
சென்னை (ஏஜென்சி), புதன்கிழமை, 20 ஆகஸ்டு 2008   ( 11:24 IST )
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் இன்றும் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், பேராவூரணி மற்றும் தளி ஆகிய இடங்களில் 9 சென்டி மீட்டரும், புதுக்கோட்டை மற்றும் போளூர் ஆகிய இடங்களில் 8 செ.மீ., சேலம், வாழப்பாடி, மதுரை விமான நிலையம் ஆகிய இடங்களில் 6.செ.மீட்டரும் மழை பெய்துள்ளது.

அதேபோல் திருத்துறைப்பூண்டி, அறந்தாங்கி, ஆலங்காயம், திருப்பத்தூர்,திருமங்கலம், காரைக்குடி, பாளையங்கோட்டை, பாரூர், மங்களபுரம், பேரைïர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இடங்களிலும் பலத்த மழை பெய்தது.

சென்னையில் நேற்றிரவு 6 மணியளவில் தொடங்கிய மழை, நள்ளிரவு வரை நீடித்தது. நகரின் பல்வேறு பகுதிகளும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை, பொதுவாக மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கம்யூ. வேலை நிறுத்தம்: இயல்பு வாழ்க்கை பாதிக்குமா?
செப்.5ல் சோனியா, மன்மோகன் சென்னை வருகை
வி.சிறுத்தைகள் மோதல் : திருமா வருத்தம்
கம்யூ. வேலைநிறுத்தம் : சென்னை போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
அமர்நாத் பிரச்னைக்கு தீர்வு: கருணாநிதி யோசனை
'ஒகேனக்கல்' குழப்பத்துக்கு காரணம் யார்? : திரிபாதி விளக்கம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கடினமான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
குசேலன்
முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி...
சுப்பிரமணியபுரம்
வல்லமை தாராயோ
ஆரோக்கியம்
நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்...
மேலும் படிக்க|மேலும்...