|
| சென்னை: ஆக.1ல் சரத்குமார் ஆர்ப்பாட்டம் |
| சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 25 ஜூலை 2008 ( 16:05 IST ) | |
மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு நிலை, உரத் தட்டுப்பாடு உட்பட பல்வேறு பிரச்சனைகளில் தமிழக அரசின் போக்கை கண்டித்து ஆகஸ்ட் 1ம் தேதி சென்னையில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசு அறிவித்திருக்கும் மின்வெட்டுகளால், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மீனவர்களின் மீதான தொடர் தாக்குதல்களால் அழுகுரல்கள் சூழ்ந்து நிற்கிறது.
தென்மேற்கு பருவ மழை பொய்த்ததால் மேட்டூர் மற்றும் பெரியாறு அணைக்கட்டுகளில் நீர்தேக்க அளவு குறைந்து வருகிறது. தொடர்ந்து நிலவும் உரத் தட்டுப்பாடுகளால் விவசாயிகள் துயரம் அடைந்துள்ளனர்.
இரட்டிப்பாகிவிட்ட கல்விக் கட்டணம், சைக்கோ மனித தாக்குதல்கள், தொடர் கொலை சம்பவங்கள் என மக்கள் நிம்மதியையும், தூக்கத்தையும் இழந்துள்ளனர்.
இப்படி அனைத்து துறைகளிலும், முற்றிலுமாய் செயலிழந்து நிற்கும் தமிழக அரசை கண்டித்து ஆகஸ்ட் முதல் தேதி சென்னை மெமோரியல் ஹால் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டத்தை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தலைமையேற்று நடத்துகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|