|
| மதக்கலவர முயற்சியை பொறுக்க மாட்டோம்: ஜெ. |
| சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 25 ஜூலை 2008 ( 15:55 IST ) | |
'மதக்கலவரங்கள் உருவாக மேற்கொள்ளப்படும் எந்த முயற்சியையும் தமது கட்சி சகித்துக்கொள்ளாது என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
'ராம பிரான் ஒரு கற்பனை கதாபாத்திரம்தான்;அந்த பெயருக்கு வேறு எந்த சிறப்பும் இல்லை' என்று சில மாதங்களுக்கு கருத்து தெரிவித்த மத்திய அரசு தற்போது 'ராமர் உருவாக்கிய பாலத்தை அவரே உடைத்து போட்டு விட்டார்' என்று உச்ச நீதிமன்றத்தில் புதிதாக ஒரு வாதத்தை முன் வைத்துள்ளது.
இதுபோன்று, ராமாயணத்தில் எங்கும் கூறப்படவில்லை என்று ராமாயணத்தை கற்றுத் தெரிந்தவர்கள் அறிவர்.
1963ம் ஆண்டு டிசம்பர் மாதம் காஷ்மீரில் ஹஸ்ரத்பல் திருத்தலத்தில் இருந்த புனிதப்பொருள் களவாடப்பட்டதால் பெரும் கலவரம் வெடித்தது. இஸ்லாமிய சமூகத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அந்த புனிதப்பொருளை மீட்க அப்போதைய மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.
அதேபோன்று, டேன் பிரவுன் எழுதிய "தி டாவின்ஸி கோட்' என்ற புத்தகம் திரைப்படமாக வந்தபோது, கிறிஸ்தவ மக்களின் எதிர்ப்பால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
ஆனால், இந்துக்களின் இறைநம்பிக்கை என்று வரும்போது, மத்திய அரசு அக்கறை காட்டாமல் உள்ளது.
ராமர் சேதுவை தகர்த்து மதக்கலவரங்கள் ஏற்பட மேற்கொள்ளப்படும் எந்த முயற்சியையும் அதிமுக சகித்துக் கொள்ளாது.
அத்தகைய முயற்சி ஏதும் நடைபெற்றால் அதனை எல்லா முறைகளிலும் அதிமுக எதிர்க்கும். உண்மையான மதச் சார்பின்மையை காப்பாற்ற உச்ச நீதிமன்றத்தில் போராடுவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|