யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
ப்ளஸ் 1 மாணாக்கருக்கு ‌சைக்கிள்: முதல்வர் துவக்கம்
சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 25 ஜூலை 2008   ( 15:39 IST )
ப்ளஸ் -1 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி இன்று தொடங்கி வை‌த்தா‌ர்.

மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கும் பரிசுத் தொகைக‌ளை வழ‌ங்‌கினா‌ர்.

இதுகுறித்து த‌மிழக அரசு இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்பு:

செ‌ன்னை தலைமை‌ச் செயலக‌த்த‌ி‌ல் இ‌ன்று நடைபெ‌ற்ற ‌விழா‌வி‌ல் முதலமைச்சர் கருணா‌நி‌தி, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகள் ஆகியவற்றில் இந்த ஆண்டில் 11ம் வகுப்பில் படிக்கும் 5 லட்சத்து 22 ஆயிரத்து 650 மாணவ‌, மாணவிகளுக்கு இலவச ‌சைக்கிள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தா‌ர்.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தமிழை ஒரு பாடமாகப் படித்து 2008‌ல் நடைபெற்ற 10ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற ஆதி திராவிடர் வகுப்பைச் சார்ந்த 10 மாணவ‌, மாணவிகளு‌க்கு தலா ரூ.10 ஆயிரம் வழ‌ங்‌கினா‌ர்.

இதேபோ‌ல் 12ம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்ற ஆதி திராவிடர் மாணவ, மாணவிகள் 6 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வழ‌ங்‌கினா‌ர்.

இதேபோல, 10ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர், சிறுபான்மையினர் ஆகிய மூன்று பிரிவுகளில் முத‌லிட‌ம் பெ‌ற்ற 43 மாணவ‌, மாணவிக‌ளுக்கு‌ம், 12ம் வகுப்பில் மா‌நில அள‌வி‌ல் முத‌ல் 3 இட‌ங்க‌ள் பெ‌ற்ற 25 மாணவ‌, மாணவிகளு‌க்கும் ரூ.3 லட்சத்து 43 ஆயிர‌ம் பரிசுத்தொகையை முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி வழ‌ங்‌கினா‌ர்.

10ம் வகுப்புப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று, அவர்களுக்கு விருப்பமான பள்ளிகளில் சேர்ந்து பயிலும் ஆயிரத்து 200 மாணவ‌, மாணவிகளு‌க்கு ரூ.3 கோடியே 36 லட்சம் நிதியுதவியை முத‌ல்வ‌ர் வழ‌ங்‌கினா‌ர்.

ஆ‌தி ‌திரா‌விட‌ர் ம‌ற்று‌ம் பழ‌ங்குடி‌யினர் வகுப்பை சே‌ர்‌ந்த 10 எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை வெளியிடுவதற்காக தலா ரூ. 20 ஆயிரத்தில் முதற்கட்டமாக ரூ.10 ஆயிர‌த்தையும் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி வழ‌ங்‌கினா‌ர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
காங்.குடன் இணைந்து செயல்பட தயார்: ராமதாஸ்
எங்களை நீக்க வைகோவுக்கு அதிகாரமில்லை: எல்.கணேசன்
திமுகவை ஆட்சியில் அமர்த்தியது தவறு: பா.ம.க
தமிழகத்தில் ரூ.32,000 கோடியில் அனல் மின்நிலையம்
இரு நாட்களுக்கு மழை : வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம்
ஆவின் புரோபயோடிக் தயிர் அறிமுகம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...