|
| எங்களை நீக்க வைகோவுக்கு அதிகாரமில்லை: எல்.கணேசன் |
| சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 25 ஜூலை 2008 ( 10:30 IST ) | |
மதிமுக எம்பிக்கள் பொள்ளாச்சி கிருஷ்ணன், சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் ஆகியோரை பதவி நீக்கம் செய்ய மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியிடம் கோரப்போவதாக போட்டி மதிமுகவை சேர்ந்த எல்.கணேசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
நாடாளுமன்றத்தின் மதிமுக தலைவர் என்ற முறையில் கடந்த 19ம் தேதி மதிமுக மக்களவை உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தினேன். இதில், பொள்ளாச்சி கிருஷ்ணனும், சிப்பிப்பாறை ரவிச்சந்திரனும் பங்கேற்கவில்லை.
இந்த கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் அரசுக்கு வாக்களிக்கும்படி நாடாளுமன்ற தலைவர் என்ற முறையில் நான் உத்தரவிட்டேன்.
ஆனால், அவர்கள் இருவரும் எனது உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
எனவே, அவர்கள் இருவரையும் எம்.பி. பதவியில் இருந்து நீக்குமாறு மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டஜியிடம் கோரிக்கை விடுக்கவுள்ளேன்.
லோக்சபை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியில் இருந்து எங்களை நீக்க சபாநாயகருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு; வைகோவுக்கு அந்த அதிகாரம் கிடையாது. இவ்வாறு எல்.கணேசன் கூறினார். அப்போது, செஞ்சி ராமச்சந்திரனும் உடனிருந்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|