|
| திமுகவை ஆட்சியில் அமர்த்தியது தவறு: பா.ம.க |
| அரியலூர் (ஏஜென்சி), 25 ஜூலை 2008 ( 10:08 IST ) | |
திமுகவை ஆட்சியில் அமர்த்தியதுதான் நாங்கள் செய்த மிகப்பெரிய தவறு என்று பா.ம.க தலைவர் ஜி.கே.மணி கூறினார்.
வன்னியர் சங்கத் தலைவர் காடு வெட்டி குரு கைது செய்யப்பட்டதை கண்டித்து அரியலூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி பேசியதாவது:
ஒரு கட்சியின் செயல்வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக அதன் தலைவர்கள் எப்படியும் பேசலாம்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாமக பொதுக்குழுவில் காடு வெட்டி குரு பேசியதற்காக இப்போது அவரை கைது செய்திருப்பது வேதனை அளிக்கிறது.
எங்களது ஆதரவினால் ஆட்சியமைத்த கருணாநிதி, இன்று தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குருவை கைது செய்துள்ளார். குரு மன்னிப்பு கேட்காத காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திமுகவை ஆட்சியில் அமரவைத்ததுதான் நாங்கள் செய்த மிகப்பெரிய தவறு. இவ்வாறு அவர் பேசினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|