யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
தமிழகத்தில் ரூ.32,000 கோடியில் அனல் மின்நிலையம்
சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 25 ஜூலை 2008   ( 09:12 IST )
மிழகத்தில் ரூ.32 ஆயிரம் கோடி செலவில் இரு அனல் மின் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

டெல்லி சென்றிருந்த முதல்வர் கருணாநிதி நேற்றிரவு சென்னை திரும்பினார். பின்னர் அண்ணா அறிவாலயம் வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தின் மின் பற்றாக்குறையை சமாளிக்க 300 மெகா வாட் மின்சாரம் வழங்கும்படி பிரதமரிடம் கேட்டோம். ஆனால், வட மாநிலங்களில் இதே நிலை இருப்பதால் 100 மெகா வாட் மின்சாரம் தர சம்மதித்தார். ஒரு மாத காலத்துக்குள் இந்த மின்சாரம் வழங்கப்படும்.

தமிழகத்தில் 32 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இரண்டு 'அல்ட்ரா மெகா அனல் மின் திட்டங்களை' செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஒன்று செய்யூரிலும், மற்றொன்று மரக்காணம் அல்லது கடலூரிலும் அமைக்கப்படும்.

எந்த இடத்தில் அமைக்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக வரும் 29ம் தேதி ஒரு குழுவினர் தமிழகம் வருகின்றனர்.

இந்த திட்டங்கள் மூலம் 8 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் நமக்கு கூடுதலாக கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இரு நாட்களுக்கு மழை : வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம்
ஆவின் புரோபயோடிக் தயிர் அறிமுகம்
த‌மிழக‌த்து‌க்கு 100 மெகாவா‌ட் ‌மி‌ன்சார‌ம்: ம‌த்‌திய அரசு அறிவிப்பு
கேளிக்கை வேண்டாம் ; கச்சத்தீவை மீட்கவும் : ஜெ. அறிவுரை
3வது அணியில் கருணாநிதி! : ராமதாஸ் ஆரூடம்
ம.தி.மு.க.விலிருந்து செஞ்சி., எல்.கணேசன் நீக்கம்!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...