யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
த‌மிழக‌த்து‌க்கு 100 மெகாவா‌ட் ‌மி‌ன்சார‌ம்: ம‌த்‌திய அரசு அறிவிப்பு
சென்னை/புதுடெல்லி (ஏஜென்சி), வியாழக்கிழமை, 24 ஜூலை 2008   ( 18:59 IST )
த‌மிழ‌க‌த்‌தி‌ல் ‌நிலவு‌ம் கடு‌ம் ‌மி‌ன்ப‌ற்றா‌க்குறை‌யை சமா‌ளி‌க்கு‌ம் வகையில், த‌மிழக‌த்து‌க்கு தின‌மு‌ம் 100 மெகாவா‌ட் ‌மி‌ன்சார‌ம் வழ‌‌ங்குவதாக ம‌த்‌திய அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

ம‌க்களவை‌யி‌ல் நட‌ந்த ந‌‌ம்‌பி‌க்கை வா‌க்கெடு‌ப்‌பி‌ல் வெ‌ற்‌றி பெ‌ற்றத‌ற்காக ‌டெ‌ல்‌லி‌யி‌ல் பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கை நே‌‌ரி‌ல் ச‌ந்‌தி‌த்து தனது வா‌‌ழ்‌த்து‌க்களை கூ‌றிய முதல்வர் கருணா‌நி‌தி, த‌மிழக‌த்‌தி‌ல் ‌நிலவு‌ம் ‌மி‌ன்ப‌ற்றா‌க்குறையை குறித்து அவரிடம் எடு‌த்து‌‌க் கூ‌றியுள்ளார்.

இதையடு‌த்து, முதல்வர் கருணாநிதியை ம‌த்‌திய ‌மி‌ன்சார‌த்துறை அமை‌ச்‌ச‌ர் சு‌சி‌ல் குமா‌ர் ‌ஷி‌ண்டே நேற்று மாலை டெ‌ல்‌லி‌யி‌ல் ‌உ‌ள்ள த‌மிழக இ‌ல்ல‌த்‌தி‌ல் நே‌‌‌ரி‌ல் ச‌ந்‌தி‌த்து ஆலோசனை நட‌த்‌தினா‌ர்.

இத‌ன் தொட‌ர்‌ச்‌சியாக, இ‌ன்று காலை த‌மிழக ‌மி‌ன்சார‌த்துறை அமை‌ச்ச‌ர் ஆ‌ற்காடு ‌வீராசா‌மியை தனது அலுவலக‌த்து‌க்கு அழை‌த்த ‌ஷி‌ண்டே, த‌மிழக‌த்து‌க்கு ‌தினமு‌ம் 100 மெ‌காவா‌ட் ‌மி‌ன்சார‌ம் வழ‌ங்குவதாக அ‌றி‌‌வி‌த்ததாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

த‌‌மிழக‌ம் ‌தினமு‌ம் 1,000 மெகாவா‌ட் ‌மி‌ன்ப‌ற்றா‌க்குறையை ச‌ந்‌தி‌த்துவரு‌ம் நிலையில், ம‌த்‌‌திய அரசு 100 மெகாவா‌ட் ‌மி‌ன்சார‌ம் வழ‌ங்‌க ஒப்புதல் அளித்துள்ளது.

‌‌தமிழகத்தில் மி‌ன்ப‌ற்றா‌க்குறையை சமா‌ளி‌‌ப்பத‌ற்காக, சென்னையில் ‌தினம் 1 ம‌ணி நேர‌மு‌ம், ம‌ற்ற‌ப் ப‌கு‌திக‌ளி‌ல் ‌தின‌ம் 2 ம‌ணி நேர‌மு‌ம் ம‌ி‌ன் வெ‌ட்டை அ‌றி‌‌வி‌த்து‌ள்ளது.

இத‌ன் மூல‌ம் 300 மெகாவா‌ட் ‌மி‌ன்சார‌ம் சேக‌‌ரி‌க்க‌ப்படு‌கிறது. இதே போ‌ல் தொ‌‌ழி‌ற்சாலைகளு‌க்கு ‌மி‌‌ன்சார விடுமுறையையு‌ம் அ‌றி‌வி‌த்து‌ள்ளது. இத‌ன் மூல‌ம் 400 மெகாவா‌ட் ‌மி‌ன்சாரமும‌் சேக‌ரி‌க்க‌ப்படு‌வதாக தெரிகிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கேளிக்கை வேண்டாம் ; கச்சத்தீவை மீட்கவும் : ஜெ. அறிவுரை
3வது அணியில் கருணாநிதி! : ராமதாஸ் ஆரூடம்
ம.தி.மு.க.விலிருந்து செஞ்சி., எல்.கணேசன் நீக்கம்!
அணுசக்தி: ஆக‌. 14‌ல் இடதுசாரிகள் மனித சங்கிலி
சேது திட்டத்தை நிறைவேற்றுவோம்: கருணாநிதி உறுதி
'உண்மையான திமுக எது?: காலம் தீர்மானிக்கும்!'
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...