யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
கேளிக்கை வேண்டாம் ; கச்சத்தீவை மீட்கவும் : ஜெ. அறிவுரை
சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 24 ஜூலை 2008   ( 15:56 IST )
பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் மட்டுமே கவனம் செலுத்தாமல், கச்சத்தீவை மீட்கவும், மின் பற்றாக்குறையை போக்கவும் நடவடிக்கை வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதிக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

மத்திய அரசில் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும்படி முதல்வர் கருணாநிதிக்கு கோரிக்கை விடுத்திருந்தேன். ஆனால், எனது ஆட்சிக் காலத்தில் நான் என்ன செய்தேன் என்று எதிர் வினா எழுப்பியிருக்கிறார்.

கடந்த 1895 மற்றும் 1930ம் ஆண்டு வரையிலான வரைபடங்களின்படி, கச்சத்தீவு இந்தியாவிற்கே சொந்தம்.

1974ம் ஆண்டு இந்தத் தீவை இலங்கையிடம் ஒப்படைக்கும் முன், மத்திய அரசு தமிழக அரசிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

தமிழக மீனவ மக்களின் மீது கருணாநிதிக்கு உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால், உடனே தனது எதிர்ப்பை தெரிவித்திருக்க வேண்டும். கச்சத்தீவை தாரைவார்ப்பதை எதிர்த்து போராட்டம் நடத்தியிருக்க வேண்டும்.

தற்போதைய மின் பற்றாக்குறைக்கு அதிமுக ஆட்சி தான் காரணம் என்று பேசியிருக்கிறார்.

எனது ஆட்சிக் காலத்தில் கடந்த 2006 மார்ச் இறுதி நிலவரப்படி, தமிழகத்தின் மின் உற்பத்தி 10,011 மெகாவாட். ஆனால், தேவைப்பட்ட மின்சாரத்தின் அளவோ 8,775 மெகாவாட் தான். தாவது, உபரியாக 1,236 மெகாவாட் மின்சாரம் கையிருப்பில் இருந்தது.

இதை அண்டை மாநிலங்களுக்கு வினியோகம் செய்ததால் அரசுக்கு கூடுதல் வருமானம் கிடைத்தது.

தற்போது சென்னையில் வசிப்பவர்களுக்கு தினமும் ஒரு மணி நேர மின்வெட்டும், மற்ற நகரங்களில் வசிப்பவர்களுக்கு தினமும் இரண்டு மணி நேர மின்வெட்டும், கிராமங்களில் வசிப்பவர்களுக்கு வாரத்தில் இரு நாட்களுக்கு 4மணி நேர மின்வெட்டும் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்வெட்டு நேரத்தையும் சேர்த்து, மொத்தம் 12 மணி நேர மின்வெட்டு தமிழகத்தில் அமலில் உள்ளது.

எனவே, வருங்காலங்களிலாவது பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தாமல், கச்சத்தீவை மீட்கவும், மின் பற்றாக்குறையை போக்கவும், முதல்வர் கருணாநிதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
3வது அணியில் கருணாநிதி! : ராமதாஸ் ஆரூடம்
ம.தி.மு.க.விலிருந்து செஞ்சி., எல்.கணேசன் நீக்கம்!
அணுசக்தி: ஆக‌. 14‌ல் இடதுசாரிகள் மனித சங்கிலி
சேது திட்டத்தை நிறைவேற்றுவோம்: கருணாநிதி உறுதி
'உண்மையான திமுக எது?: காலம் தீர்மானிக்கும்!'
மீனவர் பிரச்னை: பிரதமரிடம் கருணாநிதி கோரிக்கை
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...